
மக்கள் கண்காணிப்பகம் சார்பாக மனித உரிமைகள் விவாத அரங்கம் நடைபெற்றது
குடிமக்கள் சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டம்
இந்திய அரசு தனது குடிமக்களுக்கு சிறப்பு குடிமக்கள் அடையாள அட்டை வழங்க ஒரு ஆணையத்தை கடந்த ஜனவரி ௨௦௦௯ ல் அமைத்தது .திரு நந்தன் நீலேகனி அதன் தலைவராக பொறுப்பு ஏற்றவுடன் அதற்கு ஒரு புதிய வடிவத்தை கொடுத்தார் .இதன் மூலம் அணைத்து குடிமக்களுக்கு ஒரு சிறப்பு அடையாள எண் வழங்கி மக்கள் தங்கள் நாட்டின் குடிமக்களாக அடையாள படுத்தி கொள்வர்.இச்சிறப்பு எண் ஏழை மக்கள் குறிப்பாக மத்திய அரசின் நலத்திட்டங்களை பெற உதவியாக இருக்கும் .மேலும் இவைகளை பெறுவதற்கும் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்காணிக்கவும் உதவிடும் .மேலும் ரனைய சேகைரித்துள்ள தகவல்கள் பிறரிடம் பகிர்ந்துக் கொள்ளப்படமாட்டாது .
இப்பணி, தகவல் சேகரிப்பு ,பதிவு செய்தல், குடிமக்கள் என அடையாளம் காணுதல் ஆகிய மூன்று நிலைகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
செப்டம்பர் ௨௦௧௦ நந்தூர்பார் எனுமிடத்தில் மகாராஷ்டிராவில் முதல் அடையாள எண் வழங்கப்பட்டது (இச்சூழலில்
பலவந்தம் தன்னார்வம் மற்றும் நிதி சார்ந்த செயல்பாடுகளில் ஏழைகளை சேர்த்துக்கொள்ளுதல் போன்றவை கவணம் பெற்றுள்ளன)எனினும் உயிரியல் அளவீடு ,உடலை குறீயீடாக காண்பித்தல் மூலம் அடையாளம் காணுதல் போன்றவை நம்மை சிந்திக்க வைக்கின்றன .
இவற்றை ஆராய்ந்தால் சில முக்கியமான கேள்விகளுக்கு நாம் விடைகாண வேண்டியுள்ளது.
௧ அடையாள எண் வழங்க கைரேகை மற்றும் ஸ்கேன் செய்து ஒருவரை அடையாளம் கண்டு உறுதி செய்தலின் பொருள் என்ன?
இது தவறிலைக்க இயலாத முறையா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது
வாக்குறுதிப்படி ஏழைகளை உள்ளடக்கும் வழியா அல்லது முரணானதா
தேசிய உலக மற்றும் கார்பரேட் அரசியலோடு என்ன தொடர்பு உள்ளது?
எந்த வகையில் இவை குடிமக்கள் பாதுகாப்பையும் தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்யும்?
தொடர்ந்து கண்காணித்தல்,குறியிடக் காண்பித்தல்,பின் தொடர்தல்,அடையாளமிடல்,தகவல்களை ஒருங்கினைத்தல்,தனி மனிதர்களுடைய சுதந்திரம்,பாதுகாப்பு போன்றவை குறித்த சரியான வரையறையில்லாமல் இருப்பதால் இந்த திட்டம்
எவ்விதமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆராய வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது...
இந்த கருத்துகளை புதுடெல்லி சட்ட ஆராய்சியாளர் மருத்துவர் உஷாராமநாதன் தெரிவித்தார்.கருத்தரங்கில்
ஹென்றிடிபேன்.பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்