எங்கேயும் எப்போதும்


எங்கேயும் எப்போதும்


படத்தை பார்க்கும் பார்வையளனுக்கு படத்தின் ஏதாவது ஓரு காட்சியிலாவது இது நல்ல படம் என்று தோன்ற வேண்டும் . அந்த பணியை எங்கேயும் எப்போதும்-சிறப்பாக செய்துள்ளது .இப்படி ஒரு படம் எடுத்ததற்காக இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். .

படத்தின் கதை -படத்தின் கதை மிக சிறியது தான் செய்திதாள்களில் சாலை விபத்துகளை பார்க்கும் பொழுது அவை நமக்கு வெறும் செய்திகளாக மட்டுமே தெரிகிறது.ஆனால் அந்த விபத்தில் சிக்கியிருப்பவர்கள் ,அவர்களின் பின்னனியை நாம் தெரிந்து கொள்ள முற்படுவதில்லை .அப்படி ஒரு விபத்து நடந்து இருக்கும் இடத்திற்கு இயக்குனர் நம்மை அழைத்து செல்கிறார்.படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது பலர் கூறியது ஒன்று தான். இன்மே வண்டியை கொஞ்சம் மெதுவாக ஓட்டனும் என்பதுதான் . “அது  தான் இயக்குனரின் வெற்றி.” ஜெய்- ஜெய்க்கு விஜய் போன்ற தோற்றம் சில காட்சிகளில் அவரை இமிடேட் செய்யவும் செய்கிறார். காதல் காட்சிளில் அசத்துகிறார். படத்தின் நாயகி என்றால் அது அஞ்சலி தான் இது போன்ற வேடங்கள் சாதாரணமானவை ஏற்கனவே கற்றது தமிழ் அங்காடி தெரு போன்ற படங்களில் இதை விட கனமான வேடங்களில் அவர் நடித்துள்ளார். ஜெய்யை அவர் அலையவிடும் காட்சிள் சில இடங்களில் அவரது முகபாவம் அவர் ஒரு தேர்ந்த நடிகை என்பதை வெளிப்படுத்துகிறது. அனன்யாவுக்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவுதான் என்றாலும் அவரின் பாத்திரம் அறிந்தது அழகாக நடித்திருக்கிறார். 

அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் நல்ல புதுவரவு .படத்தில் என்னை கவர்ந்தது துனை நடிகர்களின் தேர்வுதான். கட்சிதமான தேர்வு ,குறிப்பாக அனன்யாவின் அக்காவாக வருபவர் .ஜெய்யின் கடை முதலாளி ,பேருந்ததில் பயணம் செய்தும் புது மன தம்பதிகள் ,குறிப்பாக அந்த குழந்தை ,என ஒவ்வொருவரும் நம்மை கவர்கின்றனர்.”திருச்சியும் சென்னையும் அழகாக இருக்கிறது

படத்தின் குறைகள் என்றால் .படம் சற்று மெதுவாக செல்கிறது என்பது தான் .அது மட்டுமல்லாமல் படத்தில் எதை முக்கிய படுத்துவது என்று இயக்குனர் குழம்பி விட்டார் என்பதே எனது கருத்து .காரணம் படத்தில் விபத்திற்கான காரணத்தை தெளிவாக சொல்லாதது .ஓட்டுனரின் அதிவேகம் மற்றும் கவனமின்னையால் இந்த விபத்து நடந்ததிருப்பதாக காட்டியிருந்தால் பார்வையாளனுக்கு அதன் தாக்கம் சரியாக சென்று இருக்கும் .அது மட்டுமல்லமால் அந்த விபத்து காட்சியை கடையாக மட்டும் காட்டியிருக்கலாம் அப்பொழுது படம் பார்த்துகொண்டு இருப்பவர்களுக்கும் விபத்தின் தாக்கம் சரியாக சென்று இருக்கும் .மாறாக விபத்து முதல் காட்சியிலே காட்டப்படுவதால் பார்வையாளனுக்கு யார் சாக போகிறார்கள் என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறான்



 கல்லுரி படத்தில் கடைசிக்கு  முந்தின காட்சி வரை பார்வையாளன் நாயகனும் நாககியும் எவ்வாறு சேர போகிறார்கள் என்ற கோணத்திலேயே கதை சொல்லப்பட்டு இருக்கும் இறுதி விபத்து காட்சி பார்வையாளனுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் .அது போல இந்த படத்திலும் காட்சியை அமைத்து இருக்கலாம் என்பது எனது கருத்து .வெறும் பிரச்சார படமாக மட்டும் அமையாது கமர்ஷியல் ரீதியாகவும் வெற்றி பெற வைத்த இயக்குனர் பாராட்டுக்கு உரியவர்.
















0 Comments:

Post a Comment