Archive for மார்ச் 2011




நாட்டை திருத்துவதற்காக சத்யராஜ் சமுகத்தால் பாதிக்கப்பட்ட இளையோர்களை திரட்டி நாட்டில் புரட்சி ஏற்படத்த நினைக்கிறார் .நினைத்தது நடந்ததா என்பதே மீதி கதை



விமர்சனம் ナナナナナ.

எனக்கு என்னவோ பழிக்கு பழி கதை மாதிரிதான் தெரிந்தது ளயஉக்கு கலைஞர் மேல் உள்ள கோபத்தையே காட்டுகிறது. படத்தின் ஆரம்பம் முதலே அதை சொல்லிவிடுகிறார். ஓட்டுக்கு பணம் ,ராஜா விவகாரம், அமைச்சர் மகனின் அட்டகாசம்,அமைச்சரின் அட்டகாசம் என படம் முழுவதும் திமுகவை தாக்கியே உள்ளது . போகிற போக்கில் மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெற்றது . நித்யானந்தா மேட்டர் உள்ளிட்ட ஏராளமானவை உள்ளது /

சத்யராஜ்

        சேகுவாரோ கெட்டபில் சத்யராஜ் அக்மார்க் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் போலிஸாக வரும் போது அவரது மிடுக்கு வால்ட்டர் வெற்றிவேலை நினைவுபடுத்தியது ..அமைச்சரை செருப்பை கொண்டு விளாசும் காட்சி நல்ல சான்று  அவரின் குடும்பத்தை கொல்லும் காட்சியில் அவரது முகத்தில் காட்டும் பாவங்கள்  நல்ல   நடிகனுக்கான சான்று

சீமான்

சீமான் வக்கீலாக நடித்திருக்கிறார் சாதாரணமாகவே அவர் மேடைகளில் திமுகவை கிழிகிழி என்றுதான் கிழிப்பார் .கோர்டில் அவர் கேட்டுக்கும் கேள்விகளில் உண்மை இருக்கிறது நல்ல நடிப்பு


   SAC

கேரக்டர்களை தெளிவாக விளக்கி தைரியமாக    இப்படி ஒரு படம் எடுத்ததற்கு உங்களுக்கு ஒரு பூச்செண்டு . ராசாவில் ஆரம்பித்து நித்யானந்தா பா .சிதம்பரம் தயாநிதி அழகிரி ஓட்டுக்கு பணம் உள்ளிட்ட நிசர்சணங்களை காட்டிய நீங்கள் கலைஞரை மட்டும் நல்லவராக காட்டியிருப்பது மணம் மறுக்கிறது இதேனாலேயே அதன் பின் உள்ள காட்சிகள் மனதில் வந்து அமர மறுக்கிறது . அம்மாவின் புகழை வெளிப்படையாகவே பாடுகிறீர்கள் ஒரு வேளை அம்மா தோற்றுவிட்டாள்

பாடல்கள் படத்தின் தடைக்கற்களே .ஆனாலும் "ஏதேதோ" பாட்டு ரிங்காரமிடுகிறது .. பின்னனி இசை முற்பகுதில் அவதார் படத்தின் இசையையும் பின்பகுதில் யாரடி நீ மோகினி பின்னனி இசையையும் நினைவு படுத்துகிறது . விக்ராந், பானு, ராதாரவி, உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள் முன்பே சொன்னது போல தைரியமாக மீதி கதையையும் சொல்லி இருந்தால் நிச்சயம் மாபெறும் ஹிட் தான்

நில் கவனி செல்லாதே

ராங் டேர்ன் படம் பார்த்திருக்கிரீர்களா  இம்மாதிரியான படங்களுக்கு கதை என்று எதுவும் இருக்காது  ஒரு நாயகன் ஒரு துனை நாயகன் ஒரு காமெடியன் இரண்டு செம கட்டை நாயகிகள் .கொடுரமான ஒரு வில்லன் அவனுக்கு கொடுரமான பிளாஷ்பேக் நாயகன் நாயகியை தவிர அனைவரும் இறந்து விடுவர் .
அச்சு மாறாமல் இங்கேயும் அதே தான் நடக்கிறது ///

நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஆந்திரா பக்கமுள்ள ஒரு ஊருக்கு சாமி தரிசனம் செய்வதற்காக பயனப்டுகிறார்கள் அங்கே ஒரு மர்ம மனிதனால் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள் .ஏன் வில்லன் இது போல் கொல்கிறான் என்றால் அதற்கு ஒரு மொக்கை காரணம் கூறி நம்மையும் கொல்கிறார்கள் இது போன்ற படங்களில் லாஜிக் பார்க்க கூடாதுதான் என்றாலும் சில கேள்விகள் இயக்குனரிடம் கேட்க தோன்றுகிறது .

 கொலைகள் கிட்டதட்ட ௧௧ வருடங்களாக நடைபெற்று வருகிறது .அது வரை ஒரு போலிஸ் கூடவா வந்து விசாரிக்கவில்லை
 ஆலையை இழுத்து மூடிவிட்டு செல்லும் போது பின்னாடி வெறும்     மக்கள் தான் உள்ளனர் ..
 காரணம் சற்று வலுவாக பின்னபட்டிருந்தால் இன்னும் நன்றாக  இருந்திருக்கும் .
முதல் பாதி பத்து நிமிடத்திற்கு ஒரு பாட்டு முடியல

மொத்தத்தில் நில் கவனி செல்லாதே 



////////அதான் அவன்களே சொல்லிட்டாங்களே
















இயற்கை இடர்பாடுகளால் உயிரிழப்புகள் நேரிடும்போது வருந்துவதை தவிர வேறு ஒன்றும் நம்மால் செய்ய முடிவது இல்லை .ஜப்பானில் பாதிக்கப்பட்டவர்கள்  குடும்பங்களுக்காக ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றினைந்து இப்புவியில் சுனாமி பூகம்பம் மற்றும் எரிமலை வெடிப்புகளால் மறைந்த அணைவருக்கும் அஞ்சலி செலுத்துவோம் . புவியையும் மனித உயிர்களையும் அழிப்பதற்கு திட்டங்கள் உருவாகும் போது நாம் அனைவரும் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகின்றது . அரசு மற்றும் செயல் திட்டம் தீட்டுபவர்களால் உருவாக்கப்பட்ட தீய நோக்குடைய  ரகசியத் திட்டம் தான் அணு உலை .அணுக்கசிவால் ஜப்பான் நாடு அணு கசிவின் அபாயத்தை தவிர்க்க தீவிரமாக போராடி வருகிறது .அங்குள்ள அணு உலைகள் வெடித்து சிதறினால் மக்கள் என்ன ஆவார்கள் என்று தெரியவில்லை .கட்டடவியலில் பெரும் சாதனை படைத்த அவர்களே இம்மாதிரியான கதிர்வீச்சினை தடுக்க பெரும்பாடு பட வேண்டியுள்ளது           அதனால் தான் கன்னியாகுமரியில் உள்ள கூடங்குளம் அனுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து நமக்கு அச்சம் ஏற்படுகிறது .தமிழக அரசு  நமது அனு உலைகளின் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்பதை உடனடியா தெரிவிக்க வேண்டும் .




இதே கருத்தை வலியுறுத்தி மதுரை மாநகரில் மக்கள் கண்காணிப்பகம் சார்பாக உயிரிழந்த மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது .இந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு மக்கள் கண்காணிப்பக செயல் இயக்குனர் ஹென்றிதிபேன் தலைமை தாங்கினார் .மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கினைப்பாளர் இராசன் முன்னிலை வகித்தார் .மேலும் இந்நிகழ்சியில்  தமிழ்நாடு இறையில் கல்லூரி ,லேடி டோக் கல்லூரி மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் போன்ற அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர் .நிகழ்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் கண்கானிப்பக தலைவர் பிரபாகரன் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.............




மதுரையில் 03.03.2011அன்று மக்கள் கண்காணிப்பக சேவியர் அரங்கில் தேசிய மனித உரிமை ஆணையம் மக்கள் கண்காணிப்பகத்துடன் இணைந்து நடத்தும் மனித உரிமை பயிலரங்கு நடைபெற்றது
இந்நிகழ்சிக்கு மக்கள் கண்காணிப்பக கண்காணிப்பு பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.கா கணேசன் வரவேற்புரையாற்றினார் .மக்கள் கண்காணிப்பக தமிழ்நாடு மனித உரிமைப்பிரிவு இயக்குனர் இராசன் தலைமையுரையாற்றினார்.மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி உயர்திரு .நாகராஜ் அவர்கள் துவக்கஉரையாற்றினார் .மனித உரிமை கல்வி நிறுவன இயகுனர் முனைவர்.தேவசகாயம் வாழ்த்துரை வழங்கினார் 

மக்கள் கண்காணிப்பக ஆய்வு மற்றும் பயிற்சிதுறை திரு.மீனாட்சி நன்றியுரையாற்றினார் .இந்த பயிலரங்கில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் .


நிகழ்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் கண்கணிப்பகம் பிரபாகரன் சிறப்பாக செய்து இருந்தார் .