மதுரையில் 03.03.2011அன்று மக்கள் கண்காணிப்பக சேவியர் அரங்கில் தேசிய மனித உரிமை ஆணையம் மக்கள் கண்காணிப்பகத்துடன் இணைந்து நடத்தும் மனித உரிமை பயிலரங்கு நடைபெற்றது.
இந்நிகழ்சிக்கு மக்கள் கண்காணிப்பக கண்காணிப்பு பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.கா கணேசன் வரவேற்புரையாற்றினார் .மக்கள் கண்காணிப்பக தமிழ்நாடு மனித உரிமைப்பிரிவு இயக்குனர் இராசன் தலைமையுரையாற்றினார்.மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி உயர்திரு .நாகராஜ் அவர்கள் துவக்கஉரையாற்றினார் .மனித உரிமை கல்வி நிறுவன இயகுனர் முனைவர்.தேவசகாயம் வாழ்த்துரை வழங்கினார்
மக்கள் கண்காணிப்பக ஆய்வு மற்றும் பயிற்சிதுறை திரு.மீனாட்சி நன்றியுரையாற்றினார் .இந்த பயிலரங்கில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் .
நிகழ்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் கண்கணிப்பகம் பிரபாகரன் சிறப்பாக செய்து இருந்தார் .