அதிர வைக்கும் பறை


கோடைகாலம் வந்து விட்டாலே பள்ளிகள் மற்றும் சில சமூக அமைப்புகள் கோடை பயிற்சி முகாம்களை ஆரம்பித்து நடத்துவர் .எனக்கு தெரிந்து மதுரை காந்தி மீயுசியத்தில் நடத்தப்படும் கோடைகால பயிற்சி முகாம் மிக நேர்தியாக இருக்கும்.
இன்னும் சில அமைப்புகள் மாதத்திற்கு இவ்வளவு என்று கட்டணம் வசூலிக்கின்றன. வசதியானவர்கள் தங்கள் பிள்ளைகளை கட்டண முகாமில் சேர்த்து பயிற்சி அளிக்கின்றனர் .ஆனால் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் சமூகம் மதம் சாதி போன்ற சமூக அமைப்புகளால் பாதிக்கப்படும் சிறுவர் சிறுமியர் தங்கள் கோடை காலத்தை 
எவ்வாறு கொண்டாடுவர்,? அவர்களுக்கு யார் பயிற்சி அளிப்பது..

நாட்டில் பல சமுக அமைப்புள் குழந்தைகளுக்கு அன்னதானம் அளிக்கின்றன .ஆனால் குழந்தைகளுக்கு  வெறும் உணவு அளிப்பதாலேயே அவர்களை நாம் முன்னேற்றி விட முடியாது .மாறாக அவர்களுக்கு சமுகத்தை பற்றி அறிவும் தங்களின் எதிர்காலத்தை பற்றி உணரவும் எந்த சமுக அமைப்பும் ஒரு தீர்வு அளிப்பது இல்லை ..


சில  வருடத்திற்கு முன்பு மக்கள் கண்காணிப்பகம்  பிரபாகரன் அவர்கள் என்னை தன்னுடன் ஒரு இடத்திற்கு வருமாறு என்னை அழைத்தார் .அது மதுரையை அடுதத்த அழகர் கோவில் அருகே உள்ள மகாத்மா காந்தி பள்ளி .இங்கும் வருடத்திற்கு ஒரு முறை கோடை கால பயிற்சி முகாம் நடத்தப்படுகின்றது .இங்கு வந்து இந்த முகாமில் கலந்து கொள்ளும் சிறுமியர்கள்  அனைவரும் சமூகம் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் அல்ல தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கலந்து கொள்கின்றனர் .குழந்தைகள் பல்வேறு சுழ்நிலைகளில் இங்கு வந்து கலந்து கொண்டாலும் அவர்களின் தன்னம்பிக்கை என்னை எப்பொழுதும் அசர வைக்கும் ..போன முறை சென்ற போது திரைப்பட நடிகை ரோஹினி சிறப்பாக கலந்து கொண்டார்ナナ.








இந்த முறை நான் சென்றதற்கு இன்னொறு காரணமும் உண்டு அது.. எங்கள் தலைவர் மனிதத்தேனி சொக்கலிங்கம் கலந்து கொண்டார் .மனிதத்தேனி  கலந்து கொள்ளும் எந்த நிகழ்சியையும் நான் தவறவிட்டதில்லை, காரணம் அவரின் பேச்சு அவர் இதுவரை ௫௦௦௦ மேடைகளுக்கு மேல் பேசியுள்ளார் .நகைக்சுவை மன்னன் .அவர் வேறு அழைப்பு விடுத்திருந்நதால் சென்றேன் .முதல் நிகழ்சியாக மாணவ மாணவியரின் தப்பாட்டம் நடைபெற்றது பின்னர் அதிர வைக்கும் பறை இதில் பெண்களும் கலந்து கொள்கிறார்கள் என்பது சிறப்பு





plese commond 

0 Comments:

Post a Comment