எது தர்மம் ?

எது தேவையோ அதுவே தர்மம்  ......


ஆரண்ய காண்டம், "மிக நீண்ட நாட்களாகி விட்டது"  இது மாதிரியான படத்தை பார்த்து .தமிழில் கடைசியாக வந்த கேங்ஸ்டர் படம் புதுப்பேட்டை அதன் பின்பு
 இப்பொழுதுதான் அது போன்ற படத்தை பார்க்க முடிந்தது .


கதை என்ன?

படத்தின் கதையை கூறுவது அவ்வளவு எளிதல்ல, "காரணம் படத்தில் கதை என்று எதுவும் இல்லை", ஒரு கேங்ஸ்டர் குருப்பில் ஒரு நாள் நடக்கும் சம்பவங்களே கதை

கதை மாந்தர்களை பற்றி பார்ப்போம்

முதலில் சம்பத்

சம்பத்துக்கு அன்டர் பிளே ஆக்டிங் சொல்லி குடுக்க தேவையில்லை மனிதர் அசத்துகிறார் . பாதி கதை இவர் மீது தான் பயனிக்கிறது அதுவும் கிளைமாக்ஸில்
 பின்னி எடுக்கிறார் .அதுவும் அவரது கைத்தடிகளிடம் இருந்து அவர் தப்பிப்பதும் அதன் பின் நடக்கும் காட்சிகளும் அபாரம்

ஜாக்கிஷெரப்

கேங்லீடர் தலைவனாக வருகிறார் அசத்தலான நடிப்பு அதற்கு முக்கிய காரணம் அவருக்கு குரல் கொடுத்தவர் அருமையான குரல்

மேலும் படத்தில் சிறுவனாக வருபவனின் நடிப்பு அருமை., அவன் அப்பாவிடம் பேசுவது வயதுக்கு மீறியாக இருந்தாலும் அருமையான தேர்வு

கடைசி காட்சியில் சம்பத் பையனிடம் ""உன் அப்பாவை ரொம்ப பிடிக்குமா?"" என்று கேட்பார்

அதற்கு அவன் ""அப்படி எல்லாம் இல்லை ஆனால் அவரு என் அப்பா"" என்பான் பையனின் உடல் மொழி அபாரம்..

ரவிகிருஷ்ணா நடிப்பு எப்பொழுதும்  படத்தில் அவர் பெயர் இருப்பது போலவே இருக்கிறது ஆனால் அந்த கிளைமாக்ஸ் டிவிஸ்ட் அபாரம்

கடைசியாக ஜாக்கியின் கீப்பாக வரும் அந்த பெண் அசால்டான நடப்பு ஒரு காட்சியில் ரவி அவளிடம் ""ரஜினி பிடிக்குமா,? கமல் பிடிக்குமா ?என்று கேட்பார்,. அதற்கு அவள் "ரஜினி என்பாள்". அவன் ஏன்? என்று கேட்பான் .""அவர்தான் ரஜினி அதான் என்பாள்"" .உனக்கு அவரின் எந்த படம் பிடிக்கும் என்று கேட்பான் ?அதற்கு
""பாட்ஷா"" என்பாள் .அதற்கான காரணத்தை கிளைமாக்ஸில் மிக்ஸ் பன்னியிருப்பது டைரக்டர் டச் ......

கிளைமாக்ஸில் அவளின் ஊடே ஒரு வசனம் பயணிக்கும் .""சப்பை ஆம்பளைதான் ஆனா என்னை பொறுத்த வரைக்கும் எல்லா ஆம்பளைகளும் சப்பைதான்""


வசனங்கள் பல இடங்களில் கூரிய முனை போல் வீசுகிறது .வசனங்களில் இடையே வரும் துனுக்குகள் நகைச்சுவை


இசை யுவன்

நான் என்ன சொல்ல இந்தப்படத்திற்கான பின்னனி இசையை பற்றி பல இடங்களில் பின்னனி இசை சும்மா பிச்சு உதருகிறது அதுவும் குறிப்பாக தந்தை மகனை
காட்டும் போது மீட்டும் பின்னனி இசை .சம்பத் எதிராளியிடம் சரக்கை ஒப்படைக்கும் காட்சியின் போது போடும் பின்னனி இசை என திகிலூட்டுகிறது




ஆரண்ய காண்டம் உலக சினிமாவுக்கான தொடக்க முயற்சி



குறைகள் என்று பார்த்தால் முதல் பாதி சற்று மெதுவாக பயணிப்பது. இவ்ளவு சென்சார் செய்தும் படத்தில் ஏகப்பட்ட கெட்ட வார்தைகள் உபயோகப்படுத்தியிருப்பது


18 வயதுக்கு மேற்ப்பட்டோட் தாராளமாக பார்க்கலாம்









0 Comments:

Post a Comment