இயக்குனர் மிஷ்கின் சேரன் மற்றும் நான்

 நானும் எனது நன்பனும் ஒரு படம் பார்க்க சென்று இருந்தோம் அந்த படத்தின் இடைவெளி முடியும் முன்பே அவன் கேட்டான் மாப்ள, "படம் எப்ப முடியும்?" என்று அந்த படம் "ஆட்டோகிராப்" என்னுடைய முதல் சேரன் அனுபவம் .ஆனால் தவமாய் தவமிருந்து பார்த்த பொழுது அந்த எண்ணம் சுத்தமாக மறைந்து இருந்தது .காரணம் சேரனின் இயக்கம்,ஆனால் மறுபடியும் சேரன் அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கினார்,
மாயக்கண்ணாடி மூலம் இனி சேரன் படங்களை டிவிடியில் மட்டுமே பார்ப்பது என்று ナナ.



நான் கோவையில் வேலைக்கு சேர வந்த பொழுது முதன் முதலாக பார்த்த படம் "சித்திரம் பேசுதடி" அப்பொழுது எல்லாம் இயக்குனருக்காக ஒரு படம் சென்று பார்த்தது இல்லை, நான் அந்த படத்தை பார்த்ததற்கு காரணம் அந்த படத்தில் வரும் "கத்தாழ கண்ணாழ" பாடலுக்காக ,ஆனால் படத்தின் இடைவெளியின் போது படத்தின் இயக்குனரின் பெயர் தெரியாவிடில் மண்டை வெடித்து விடும் போல் இருந்தது .அதன் பின் மிஷ்கினின் தீவிர ரசிகானாகி விட்டேன் .

ஆனால் மிஷ்கினின் அஞ்சாதே பார்க்கும் பொழுது எனக்கு ஒரு ஆயாசம் ஏற்ப்பட்டது காரணம் படத்தின் நீளம் கதாநாயகனின் நடிப்பு ஆனால் பதிவுலகம் வாசிக்க ஆரம்பித்த பிறகு உலக சினிமாக்களின் மீது எனது பார்வை திரும்பிய பிறகு மறுபடியும் பார்க்க தோன்றிய படம் "அஞ்சாதே"

நந்தலாலா அறிவிப்பு வந்த நாள் முதல் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம்  தோன்றியது .முதல் நாள் இரவு அந்த படத்தை பார்த்த பொழுது பல இடங்களில் என்னை அறியாமல் அழுது கொண்டே இருந்தேன்., அதன் தாக்கம் இன்றலவில் என்னுல்லே இருந்து கொண்டே இருக்கிறது .அதுவும் இளையராஜவின் அந்த அறுக்கும் குரல் இன்னும் என்னுடைய காதில் கேட்டுக்கொண்டே இருக்கின்றது.
 





"யுத்தம் செய்" படத்தில் நான் சேரனும், மிஷ்கினும் என்ன செய்ய போகிறார்கள் என்ற எண்ணத்திலேய திரையரங்கில் அமர்ந்தேன் .சேரனின் இன்னொறு முகம் அந்த ""௩௬௦டிகிரி"" கோணத்தில் அவரது கையில் இருந்து திரும்பி செல்லும் அந்த காட்சியில் சேரன் தன்னுடை முத்திரையை அழுந்த பதித்துள்ளார் .மிஷ்கினை பற்றி இன்னும் நான் சொல்ல வேண்டியது இல்லை .தமிழ் படங்களின் அடுத்த தலைமுறை இயக்குனர்களின் முக்கியமான நாற்காலியில் அமர்ந்து உள்ளார் என்னுடைய  எதிர்பார்ப்க்குரிய இயக்குனர்களில் ஒருவராகி உள்ளார்............................................................................................................


pt

0 Comments:

Post a Comment