Archive for ஜூன் 2011

180-108 வச்சுருக்கலாம்

படங்களை பார்ப்பதற்கென்று சில காரணங்கள் உண்டு நான் இந்த படத்தை பார்த்ததற்கு ஒரே காரணம் "நித்யா மேனன்"


சில மாதங்களுக்கு முன்பு உருமி படம் பார்த்ததில் இருந்து அவர் தமிழில் நடிக்க மாட்டாரா என்ற ஏக்கம் எனக்குள் இருந்தது . பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு நன்றாக இருந்தது .மேலும் நண்பனிடம் உதயன் படம் எப்படி கேட்டதற்கு .""தயவு செஞ்சு போயிடாத "" என்று கெஞ்சினான் அதனால் இந்த படத்திற்கு சென்றேன்

180




ஆரம்பக்காட்சியில் ""சித்ார்த்"" காசியில் தனது அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற வருகிறார் . பின்பு மௌலி வீட்டில் வந்து PAYING GUESTA வந்து தங்குகிறார் .நித்யா மேனன் ஒரு
பத்திரிக்கை புகைப்படக்காரராக வருகிறார் .சில பல காட்சிகளுக்கு பிறகு "நித்யாவுக்கு சித்தார்த் மேல் காதல் பிறக்கிறது" .இதற்கு இடையே ஒரு சின்ன பிளாஷ்பேக்

சித்தார்த் அமெரிக்காவில் டாக்டராக பணிபுரிறார் அங்கு விபத்தில் காயம் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் பிரியா ஆணந்த்., அவருக்கு சிசிச்சை அளிக்கிறார் சித்தார்த், சில சில
காட்சிகளுக்கு பிறகு அவர்களுக்குள் காதல் பிறக்கிறது .

மீண்டும் நிகழ்காலம்

 நித்யாமேனன் ஒரு வழியாக சித்தார்திடம் காதலை சொல்கிறார் .ஆனால் சித்தார்த் ஒரு பதிலையும் சொல்லாமல் வீட்டை காலி செய்து விட்டு கிளம்புகிறார் அவரை பின் தொடர்ந்து வரும் நித்யா  விபத்தில் சிக்கி கொள்ள அவரை காப்பாற்றுகிறார் சித்தார்த்     ....

இடைவேளை

மறுபடியும் பிளாஷ்பேக்

 இந்த முறை சித்தார்த்தின் தாயார் அமெரிக்கா வந்து மகனின் காதலுக்கு சம்பதம் தெரிவித்து விட்டு இறக்கிறார். சில மாதங்களுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்ள் .

மறுபடியும் நிகழ்காலம்

""மேல் சிகிச்சைக்காக நித்யாவுடம் அமெரிக்கா பயணிக்கிறார் சித்தார்த் நித்யாவுக்கு ஆப்ரேசன் செய்கிறார்கள்"" மறுபடியும் பிளாஷ்பேக்  இப்பொழுது சித்தார்திடம் ஒரு உண்மை சொல்ல படுகிறது அதாவது அவருக்கு ஒரு விதமான கேன்சர் நோய் தாக்கி முற்றிய நிலையில் இருப்பதால் அவர் இன்னும் ஆறு மாதம் தான் உயிரோடு இருப்பார் என்று ....இதனால் மனமுடையும் சித்தார்த் தன்னை எமன் தொடர்வதாக கற்பனை செய்து கொள்கிறார் .இறுதியாக சித்தார்துக்கு என்னவாயிற்று நித்யா,பிரியா வின் கதி என்னவாயிற்று போன்றவற்றை திரையரங்கத்தில் போய் பார்த்து கொள்ளுங்கள்.




சித்தார்த்

நீண்ட நாட்களுக்கு பின் தமிழில் நடித்தாலும் முதல் படத்தில் நடித்தது போலவே இருக்கிறார் .பின் பாதியில் மரணத்திற்கு பயந்து ஓடுவது போன்ற சில இடங்களில் நடிக்கிறார்


பிரியா

வாமனன் படத்தில் நடித்தவர் அதில் விட இந்த படத்தில் நடிப்பதற்கு கொஞ்சம் வாய்ப்பு அதிகம்


நித்யா மேனன்

முன்பே சொன்னது போல் நான் நித்யா மேனனின் ரசிகன் என்பதால் என்னை வெகுவாக கவர்ந்து விட்டார் அவரின் கூந்தல் கண்கள் அப்புறம் (சரி விடு விடு )


இசை ----சரத்

பாடல்களில் புதிய இசை பல இடங்களில் ரசிக்க வைக்கிறது  பின்னனி இசையும் நன்றாகத்தான் உள்ளது.


படத்தின் முக்கியமான பகுதி கேமராதான்  பால்களில் நல்ல தரமான ஒளிப்பதிவு .


இயக்கம் ----ஜெயேந்திரா .


முற்பாதி படம் நன்றாக போகிறது ஆனால் பிற்பாதியில் இயக்குனர் முழுவதுமாக கோட்டை விட்டுள்ளார் என்ன செய்வது என்று அவருக்கே குழப்பாமா இருந்திருக்கு வேண்டும் .

ஏதோ சொல்ல வந்து எப்படியோ முடித்து விட்டார்.



Blogger indli vote button



சமசீர் கல்வி வேண்டுமா ? வேண்டாமா ?

சமசீர் கல்வி வேண்டுமா ? வேண்டாமா ? என்ற கேள்வி தற்சமயம் பரபரப்பாக கேட்கப்படுக்கிறது  .முந்தைய முதல்வர்
தன்னைப்பற்றி பாடத்திட்டங்களை கூட எடுத்து விட்டு புத்தகத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டாலும்
தற்பொழுதைய முதல்வர் அதை பரிசீலீக்க கூட முன்வரவில்லை... வைகோவை கழட்டி விட தூத்துக்குடி நிறுவனத்திடமிருந்து எவ்வளவு வாங்கினார் என்பது  வைகோவுக்கு கூட தெரியாது . ஆனால் எனது சந்தேகம் என்னவெனில் தனியால் பள்ளிகளிடம் இருந்து இவர் எவ்வளவு வாங்கியிருப்பார் என்பதே . பணக்காரனும் மெத்த படித்தவனும் என்றுமே தனக்கு கீழ் இருக்கும் சமூகம் தனக்கு சமமாக வருவதை விரும்புவதில்லை ... முந்தைய ஆட்சியாளர்கள் கொண்டு வந்தது என்ற ஒரே காரணத்திற்காக சமச்சீர் கல்வியை நீங்கள் எதிர்பீர்கள் என்றால் கருணாநிதியின் கதியே உங்களுக்கும்  மதுரையின் பல்வேறு இடங்களில் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றது அதன் ஒரு பகுதியாக கடந்த புதன் கிழமை அன்று மக்கள் கண்காணிப்பகம் சார்பாக சமச்சீர் கல்விக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்ட காங்கிரஸ் முன்னால் பொது செயலாளர் மனிதத்தேனி ரா. சொக்கலிங்கம், மதசாற்பற்ற ஜனதாதளம் தலைவர் ஜான் மோசஸ் மனித குடிமக்கள் இயக்கம் தேவசகாயம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்  ..







மேலும் மனித உரிமை சார்பாக தமிழக முதல்வர்க்கு இந்த கடிதமும் அனுப்பப் பட்டுள்ளது







தாங்கள் மீண்டும் மூன்றாவது முறையாக தமிழக முதலமைச்சராக
பொறுப்பேற்றமைக்கு  மிக்க மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாடாளுமன்றத்தில் குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச்
சட்டம் நிறைவேற்றப்பட்டு 2010ஏப்ரல் முதல் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது
தங்களுக்கு தெரிந்ததே. மத்திய அரசால் உருவாக்கப்பட்ட இச்சட்டத்தை மாநில அரசுகள்
தத்தமது சூழலுக்கு ஏற்ப விதிகளை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்
கொண்டது. ஆனால் இதுவரை தமிழகத்தில் விதிகள் உருவாக்கப்படவில்லை. இதனால்
தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை
தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
ஜனநாயக சக்திகளின் நீண்டகால பேராட்டங்களின் விளைவாகவே தமிழகத்தில் சமச்சீர்க் கல்வி
பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பொதுபாடதிட்டமே சமச்சீர்க் கல்வி ஆகாது என்பதை
தாங்கள்அறிவீர்கள் ஆனால் பொது பாடத் திட்டம், பொது பாடநூல், பத்தாம் வகுப்பு இறுதியில்
பொதுத் தேர்வு என்பன சமச்சீர்க் கல்வியை நோக்கிய பயணமாக இருந்தது. பிற மாநிலங்களை
ஒப்பிடும் போது தமிழகத்தில் மட்டும்தான் நான்கு வகையான வாரியங்கள், பாடதிட்டங்கள் மற்றும்
தேர்வு முறைகள் உள்ளன. மீண்டும் நான்கு வகையான பாடதிட்டத்திற்குள் செல்வது என்பது
கல்வி வளர்ச்சியில் பின்னடைவையே ஏற்படுத்தும் என்பதால் மீண்டும் சமச்சீர்க் கல்வி
பாடதிட்டத்தையே இக்கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த குடிமைச் சமூகங்களின் சார்பில்
கேட்டுக் கொள்கிறோம்.
எனவே கீழ்க்கண்ட கோரிக்கைகளை தங்களின் மேலான கவனத்திற்கு முன்வைக்கிறோம்.

தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு
உடனடியாக கல்வி உரிமைச் சட்டத்திற்கான விதிகளை உருவாக்க வேண்டும்.
கல்வி உரிமைச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த போதிய நிதியை ஒதுக்கிடு

செய்ய வேண்டும். வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அதற்காக அறிவிப்பை தமிழக
அரசு வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார்ப் பள்ளிகளில் நலிந்த மற்றும் வாய்ப்பற்ற

பிரிவைச் சார்ந்த குழந்தைகளுக்கு ௨௫ சதவீத இடஒதுக்கிட்டை முறையாக
நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தைவிட அதிக கட்டணம் பெறும் பள்ளிகள் மீது கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்க
வேண்டும்.

மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை தமிழக அரசு உடனடியாக
ஏற்படுத்த வேண்டும்.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாநில கல்வி ஆலோசனைக் குழுவை உடனடியாக
ஏற்படுத்த வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் தேவையான ஆசிரியர் நியமனம், ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர், ஒரு
பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என்று நியமிக்க வேண்டும்.
பள்ளிகளை கண்காணிக்கும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரும்பகுதி பங்கு
உள்ளதால் தமிழக அளவில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு போதிய விழிப்புணர்வும்
வழிகாட்டுதலும் அளிக்க தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

ஜனநாயக அமைப்புகளின் நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாக கொண்டு
வரப்பட்ட சமச்சீர்க் கல்வி பாட திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும். பல வகையான பள்ளிகள், பலவகை வாரியங்கள் உள்ள நிலையை
மாற்றி ஒரே மாதிரியான பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உண்மையான சமச்சீர் கல்வி என்பது பொதுப் பள்ளிகள், அருகமைப் பள்ளிகள் வழியாக
மட்டுமே நிறைவேற இயலும். தமிழக அரசு இந்த இலக்கை நோக்கி செல்ல வேண்டும்.
எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலனை
செய்து பள்ளிக் கல்வியில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ குடிமைச் சமூக
அமைப்புகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.



REDY-2011


நேற்று  கோவை சென்றிருந்தேன்., கர்னாட்டிக் திரையரங்கில் சல்மான்கான்., அஸின் நடித்த ""ரெடி"" படம் திரையிட்டு இருந்தார்கள். ஹிந்தி படம் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டதாலும், அசினுக்காகவும் சென்றேன் . படம் தொடங்கி 2 வது நிமிடத்தில் தான் எனக்கு புரிந்தது, இது தமிழ் உத்தமபுத்திரன் ரீமேக் என்று . ஆனால் சிலசில மாற்றங்கள் இடைவெளி  காட்சிகள் போன்றவை அருமையாக வந்துள்ளது., அதிலும் அந்த ""டிங்கா டிங்கா"" பாடலில் அசின் அவ்வளவு அழகு.. வெகு நாட்கள் ஆகிவிட்டது இவ்வளவு அழகான அசினை பார்த்து,மற்ற பாடல்கள் என்னை அவ்வளவு கவரவில்லை .... படம் பார்த்து கொண்டிருக்கும் பொழுது தான் ஒன்று தோன்றிaது ஏன் இன்னும் சல்மான் சட்டையை கழட்ட வில்லை என்று?  நல்ல வேளை அசினுக்கு கனவு வந்து அந்த குறையையும் தீர்த்து வைத்தார் ... இரண்டரை மணி நேரம் பொழுது போக்க அருமையாd படம் ,,,,,,,


இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்





எது தர்மம் ?

எது தேவையோ அதுவே தர்மம்  ......


ஆரண்ய காண்டம், "மிக நீண்ட நாட்களாகி விட்டது"  இது மாதிரியான படத்தை பார்த்து .தமிழில் கடைசியாக வந்த கேங்ஸ்டர் படம் புதுப்பேட்டை அதன் பின்பு
 இப்பொழுதுதான் அது போன்ற படத்தை பார்க்க முடிந்தது .


கதை என்ன?

படத்தின் கதையை கூறுவது அவ்வளவு எளிதல்ல, "காரணம் படத்தில் கதை என்று எதுவும் இல்லை", ஒரு கேங்ஸ்டர் குருப்பில் ஒரு நாள் நடக்கும் சம்பவங்களே கதை

கதை மாந்தர்களை பற்றி பார்ப்போம்

முதலில் சம்பத்

சம்பத்துக்கு அன்டர் பிளே ஆக்டிங் சொல்லி குடுக்க தேவையில்லை மனிதர் அசத்துகிறார் . பாதி கதை இவர் மீது தான் பயனிக்கிறது அதுவும் கிளைமாக்ஸில்
 பின்னி எடுக்கிறார் .அதுவும் அவரது கைத்தடிகளிடம் இருந்து அவர் தப்பிப்பதும் அதன் பின் நடக்கும் காட்சிகளும் அபாரம்

ஜாக்கிஷெரப்

கேங்லீடர் தலைவனாக வருகிறார் அசத்தலான நடிப்பு அதற்கு முக்கிய காரணம் அவருக்கு குரல் கொடுத்தவர் அருமையான குரல்

மேலும் படத்தில் சிறுவனாக வருபவனின் நடிப்பு அருமை., அவன் அப்பாவிடம் பேசுவது வயதுக்கு மீறியாக இருந்தாலும் அருமையான தேர்வு

கடைசி காட்சியில் சம்பத் பையனிடம் ""உன் அப்பாவை ரொம்ப பிடிக்குமா?"" என்று கேட்பார்

அதற்கு அவன் ""அப்படி எல்லாம் இல்லை ஆனால் அவரு என் அப்பா"" என்பான் பையனின் உடல் மொழி அபாரம்..

ரவிகிருஷ்ணா நடிப்பு எப்பொழுதும்  படத்தில் அவர் பெயர் இருப்பது போலவே இருக்கிறது ஆனால் அந்த கிளைமாக்ஸ் டிவிஸ்ட் அபாரம்

கடைசியாக ஜாக்கியின் கீப்பாக வரும் அந்த பெண் அசால்டான நடப்பு ஒரு காட்சியில் ரவி அவளிடம் ""ரஜினி பிடிக்குமா,? கமல் பிடிக்குமா ?என்று கேட்பார்,. அதற்கு அவள் "ரஜினி என்பாள்". அவன் ஏன்? என்று கேட்பான் .""அவர்தான் ரஜினி அதான் என்பாள்"" .உனக்கு அவரின் எந்த படம் பிடிக்கும் என்று கேட்பான் ?அதற்கு
""பாட்ஷா"" என்பாள் .அதற்கான காரணத்தை கிளைமாக்ஸில் மிக்ஸ் பன்னியிருப்பது டைரக்டர் டச் ......

கிளைமாக்ஸில் அவளின் ஊடே ஒரு வசனம் பயணிக்கும் .""சப்பை ஆம்பளைதான் ஆனா என்னை பொறுத்த வரைக்கும் எல்லா ஆம்பளைகளும் சப்பைதான்""


வசனங்கள் பல இடங்களில் கூரிய முனை போல் வீசுகிறது .வசனங்களில் இடையே வரும் துனுக்குகள் நகைச்சுவை


இசை யுவன்

நான் என்ன சொல்ல இந்தப்படத்திற்கான பின்னனி இசையை பற்றி பல இடங்களில் பின்னனி இசை சும்மா பிச்சு உதருகிறது அதுவும் குறிப்பாக தந்தை மகனை
காட்டும் போது மீட்டும் பின்னனி இசை .சம்பத் எதிராளியிடம் சரக்கை ஒப்படைக்கும் காட்சியின் போது போடும் பின்னனி இசை என திகிலூட்டுகிறது




ஆரண்ய காண்டம் உலக சினிமாவுக்கான தொடக்க முயற்சி



குறைகள் என்று பார்த்தால் முதல் பாதி சற்று மெதுவாக பயணிப்பது. இவ்ளவு சென்சார் செய்தும் படத்தில் ஏகப்பட்ட கெட்ட வார்தைகள் உபயோகப்படுத்தியிருப்பது


18 வயதுக்கு மேற்ப்பட்டோட் தாராளமாக பார்க்கலாம்