படங்களை பார்ப்பதற்கென்று சில காரணங்கள் உண்டு நான் இந்த படத்தை பார்த்ததற்கு ஒரே காரணம் "நித்யா மேனன்"
சில மாதங்களுக்கு முன்பு உருமி படம் பார்த்ததில் இருந்து அவர் தமிழில் நடிக்க மாட்டாரா என்ற ஏக்கம் எனக்குள் இருந்தது . பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு நன்றாக இருந்தது .மேலும் நண்பனிடம் உதயன் படம் எப்படி கேட்டதற்கு .""தயவு செஞ்சு போயிடாத "" என்று கெஞ்சினான் அதனால் இந்த படத்திற்கு சென்றேன்
180
ஆரம்பக்காட்சியில் ""சித்ார்த்"" காசியில் தனது அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற வருகிறார் . பின்பு மௌலி வீட்டில் வந்து PAYING GUESTA வந்து தங்குகிறார் .நித்யா மேனன் ஒரு
பத்திரிக்கை புகைப்படக்காரராக வருகிறார் .சில பல காட்சிகளுக்கு பிறகு "நித்யாவுக்கு சித்தார்த் மேல் காதல் பிறக்கிறது" .இதற்கு இடையே ஒரு சின்ன பிளாஷ்பேக்
சித்தார்த் அமெரிக்காவில் டாக்டராக பணிபுரிறார் அங்கு விபத்தில் காயம் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் பிரியா ஆணந்த்., அவருக்கு சிசிச்சை அளிக்கிறார் சித்தார்த், சில சில
காட்சிகளுக்கு பிறகு அவர்களுக்குள் காதல் பிறக்கிறது .
மீண்டும் நிகழ்காலம்
நித்யாமேனன் ஒரு வழியாக சித்தார்திடம் காதலை சொல்கிறார் .ஆனால் சித்தார்த் ஒரு பதிலையும் சொல்லாமல் வீட்டை காலி செய்து விட்டு கிளம்புகிறார் அவரை பின் தொடர்ந்து வரும் நித்யா விபத்தில் சிக்கி கொள்ள அவரை காப்பாற்றுகிறார் சித்தார்த் ....
இடைவேளை
மறுபடியும் பிளாஷ்பேக்
இந்த முறை சித்தார்த்தின் தாயார் அமெரிக்கா வந்து மகனின் காதலுக்கு சம்பதம் தெரிவித்து விட்டு இறக்கிறார். சில மாதங்களுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்ள் .
மறுபடியும் நிகழ்காலம்
""மேல் சிகிச்சைக்காக நித்யாவுடம் அமெரிக்கா பயணிக்கிறார் சித்தார்த் நித்யாவுக்கு ஆப்ரேசன் செய்கிறார்கள்"" மறுபடியும் பிளாஷ்பேக் இப்பொழுது சித்தார்திடம் ஒரு உண்மை சொல்ல படுகிறது அதாவது அவருக்கு ஒரு விதமான கேன்சர் நோய் தாக்கி முற்றிய நிலையில் இருப்பதால் அவர் இன்னும் ஆறு மாதம் தான் உயிரோடு இருப்பார் என்று ....இதனால் மனமுடையும் சித்தார்த் தன்னை எமன் தொடர்வதாக கற்பனை செய்து கொள்கிறார் .இறுதியாக சித்தார்துக்கு என்னவாயிற்று நித்யா,பிரியா வின் கதி என்னவாயிற்று போன்றவற்றை திரையரங்கத்தில் போய் பார்த்து கொள்ளுங்கள்.
சித்தார்த்
நீண்ட நாட்களுக்கு பின் தமிழில் நடித்தாலும் முதல் படத்தில் நடித்தது போலவே இருக்கிறார் .பின் பாதியில் மரணத்திற்கு பயந்து ஓடுவது போன்ற சில இடங்களில் நடிக்கிறார்
பிரியா
வாமனன் படத்தில் நடித்தவர் அதில் விட இந்த படத்தில் நடிப்பதற்கு கொஞ்சம் வாய்ப்பு அதிகம்
நித்யா மேனன்
முன்பே சொன்னது போல் நான் நித்யா மேனனின் ரசிகன் என்பதால் என்னை வெகுவாக கவர்ந்து விட்டார் அவரின் கூந்தல் கண்கள் அப்புறம் (சரி விடு விடு )
இசை ----சரத்
பாடல்களில் புதிய இசை பல இடங்களில் ரசிக்க வைக்கிறது பின்னனி இசையும் நன்றாகத்தான் உள்ளது.
படத்தின் முக்கியமான பகுதி கேமராதான் பால்களில் நல்ல தரமான ஒளிப்பதிவு .
இயக்கம் ----ஜெயேந்திரா .
முற்பாதி படம் நன்றாக போகிறது ஆனால் பிற்பாதியில் இயக்குனர் முழுவதுமாக கோட்டை விட்டுள்ளார் என்ன செய்வது என்று அவருக்கே குழப்பாமா இருந்திருக்கு வேண்டும் .
ஏதோ சொல்ல வந்து எப்படியோ முடித்து விட்டார்.
Blogger indli vote button