சமசீர் கல்வி வேண்டுமா ? வேண்டாமா ? என்ற கேள்வி தற்சமயம் பரபரப்பாக கேட்கப்படுக்கிறது .முந்தைய முதல்வர்
தன்னைப்பற்றி பாடத்திட்டங்களை கூட எடுத்து விட்டு புத்தகத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டாலும்
தற்பொழுதைய முதல்வர் அதை பரிசீலீக்க கூட முன்வரவில்லை... வைகோவை கழட்டி விட தூத்துக்குடி நிறுவனத்திடமிருந்து எவ்வளவு வாங்கினார் என்பது வைகோவுக்கு கூட தெரியாது . ஆனால் எனது சந்தேகம் என்னவெனில் தனியால் பள்ளிகளிடம் இருந்து இவர் எவ்வளவு வாங்கியிருப்பார் என்பதே . பணக்காரனும் மெத்த படித்தவனும் என்றுமே தனக்கு கீழ் இருக்கும் சமூகம் தனக்கு சமமாக வருவதை விரும்புவதில்லை ... முந்தைய ஆட்சியாளர்கள் கொண்டு வந்தது என்ற ஒரே காரணத்திற்காக சமச்சீர் கல்வியை நீங்கள் எதிர்பீர்கள் என்றால் கருணாநிதியின் கதியே உங்களுக்கும் மதுரையின் பல்வேறு இடங்களில் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றது அதன் ஒரு பகுதியாக கடந்த புதன் கிழமை அன்று மக்கள் கண்காணிப்பகம் சார்பாக சமச்சீர் கல்விக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்ட காங்கிரஸ் முன்னால் பொது செயலாளர் மனிதத்தேனி ரா. சொக்கலிங்கம், மதசாற்பற்ற ஜனதாதளம் தலைவர் ஜான் மோசஸ் மனித குடிமக்கள் இயக்கம் தேவசகாயம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் ..


மேலும் மனித உரிமை சார்பாக தமிழக முதல்வர்க்கு இந்த கடிதமும் அனுப்பப் பட்டுள்ளது
தாங்கள் மீண்டும் மூன்றாவது முறையாக தமிழக முதலமைச்சராக
பொறுப்பேற்றமைக்கு மிக்க மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாடாளுமன்றத்தில் குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச்
சட்டம் நிறைவேற்றப்பட்டு 2010ஏப்ரல் முதல் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது
தங்களுக்கு தெரிந்ததே. மத்திய அரசால் உருவாக்கப்பட்ட இச்சட்டத்தை மாநில அரசுகள்
தத்தமது சூழலுக்கு ஏற்ப விதிகளை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்
கொண்டது. ஆனால் இதுவரை தமிழகத்தில் விதிகள் உருவாக்கப்படவில்லை. இதனால்
தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை
தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
ஜனநாயக சக்திகளின் நீண்டகால பேராட்டங்களின் விளைவாகவே தமிழகத்தில் சமச்சீர்க் கல்வி
பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பொதுபாடதிட்டமே சமச்சீர்க் கல்வி ஆகாது என்பதை
தாங்கள்அறிவீர்கள் ஆனால் பொது பாடத் திட்டம், பொது பாடநூல், பத்தாம் வகுப்பு இறுதியில்
பொதுத் தேர்வு என்பன சமச்சீர்க் கல்வியை நோக்கிய பயணமாக இருந்தது. பிற மாநிலங்களை
ஒப்பிடும் போது தமிழகத்தில் மட்டும்தான் நான்கு வகையான வாரியங்கள், பாடதிட்டங்கள் மற்றும்
தேர்வு முறைகள் உள்ளன. மீண்டும் நான்கு வகையான பாடதிட்டத்திற்குள் செல்வது என்பது
கல்வி வளர்ச்சியில் பின்னடைவையே ஏற்படுத்தும் என்பதால் மீண்டும் சமச்சீர்க் கல்வி
பாடதிட்டத்தையே இக்கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த குடிமைச் சமூகங்களின் சார்பில்
கேட்டுக் கொள்கிறோம்.
எனவே கீழ்க்கண்ட கோரிக்கைகளை தங்களின் மேலான கவனத்திற்கு முன்வைக்கிறோம்.
தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு
உடனடியாக கல்வி உரிமைச் சட்டத்திற்கான விதிகளை உருவாக்க வேண்டும்.
கல்வி உரிமைச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த போதிய நிதியை ஒதுக்கிடு
செய்ய வேண்டும். வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அதற்காக அறிவிப்பை தமிழக
அரசு வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார்ப் பள்ளிகளில் நலிந்த மற்றும் வாய்ப்பற்ற
பிரிவைச் சார்ந்த குழந்தைகளுக்கு ௨௫ சதவீத இடஒதுக்கிட்டை முறையாக
நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தைவிட அதிக கட்டணம் பெறும் பள்ளிகள் மீது கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்க
வேண்டும்.
மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை தமிழக அரசு உடனடியாக
ஏற்படுத்த வேண்டும்.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாநில கல்வி ஆலோசனைக் குழுவை உடனடியாக
ஏற்படுத்த வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் தேவையான ஆசிரியர் நியமனம், ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர், ஒரு
பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என்று நியமிக்க வேண்டும்.
பள்ளிகளை கண்காணிக்கும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரும்பகுதி பங்கு
உள்ளதால் தமிழக அளவில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு போதிய விழிப்புணர்வும்
வழிகாட்டுதலும் அளிக்க தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
ஜனநாயக அமைப்புகளின் நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாக கொண்டு
வரப்பட்ட சமச்சீர்க் கல்வி பாட திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும். பல வகையான பள்ளிகள், பலவகை வாரியங்கள் உள்ள நிலையை
மாற்றி ஒரே மாதிரியான பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மையான சமச்சீர் கல்வி என்பது பொதுப் பள்ளிகள், அருகமைப் பள்ளிகள் வழியாக
மட்டுமே நிறைவேற இயலும். தமிழக அரசு இந்த இலக்கை நோக்கி செல்ல வேண்டும்.
எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலனை
செய்து பள்ளிக் கல்வியில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ குடிமைச் சமூக
அமைப்புகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
சபாஷ், நான் சின்னப்பையன். உங்களுடன் போட்டி போடும் அளவிற்கு எனக்கு அறிவு இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.
நீங்கள் ‘சமச்சீர் கல்வி’ வேண்டுமா, வேண்டாமா என்று நாடளாவில் நாட்கணக்கில் பட்டிமன்றம் நடத்தி நீதிமன்றம் வரை சென்று வந்ததைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் ‘சமச்சீர்’ என்ற சொல்லுக்கு ஒருவனுக்கும் அர்த்தம் தெரியவில்லை என்று கேவலப்படுத்தத்தான் தோன்றுகிறது. மன்னிக்கவும். போட்டி என்று ஆன பின், வயது வித்தியாசமில்லாமல் தான் பேசவேண்டிருக்கிறது.
நான் இங்கு சொல்ல போகும் கருத்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ‘அறிவாளிகள்’ வயிற்றிலும் புளியைக் கரைக்கலாம். ‘சமசீர்கல்விக்கும்’ கருணாநிதியின் ‘சமச்சீர் கல்விக்கும்’ ஏகப்பட்ட வேறுபாடு இருக்கிறது. ஆங்கிலத்தில் பல காலங்களுக்கு முன் நான் எழுதியதை திருப்பி எழுதும் நிலைக்கு உங்களின் அறிவிலித்தனமான பேச்சுக்கள் தள்ளிவிட்டது.
‘சமச்சீர் கல்வி’ என்பதின் உண்மையான அர்த்தம் தெரிய வேண்டுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளங்களில் காணலாம்.
1. http://www.kelvi.tk
2. http://arivuu.files.wordpress.com/2011/08/sivavidya.pdf
மேலுள்ளவைகளைப் படித்து விட்டு வாரும். சமச்சீர் கல்வி பற்றி எந்த அளவிற்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயார், முதலில் ‘சமச்சீர் கல்வி’ என்றால் என்ன என்பதை அறியும். கல்வித்துறையில் பணிபுரியும் முட்டாள்களே மக்களை முட்டாள் ஆக்காதீர்கள். கருத்துக்களைத் திரிக்காதீர்கள். திரித்தால், என்போன்றவர்களிடம் கேவலப்பபட்டுப் போவீர்கள். செய்யுமுன் சிந்தித்து செயல்படுங்கள். கால் செருப்பு தூக்கப்போனால் பிறகு செருப்படி வாங்கவேண்டியதுதான்.
———————————————————
அறிவை வளர்த்துக் கொள். இது ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு கூறும் அறிவுரை. உங்கள் குழந்தைகளை எங்கள் பள்ளிக்கு, கல்லூரிக்கு அனுப்புங்கள். நாங்கள் அவர்களின் அறிவை வளர்த்து விடுகிறோம். இது திருட்டுக் கயவாளி ஆசிரிய கொள்ளைக்கூட்டங்களின் பொய்யுரை. அறிவை வளர்த்துக்கொள்ள ஒருவன் பல ஆண்டுகள் பள்ளி சென்று, புத்தகங்கள் பல படித்து, பாடங்கள் பல பயின்று, தேர்வுகள் பல எழுதி, பட்டங்கள் பல பெறவேண்டுமா? தேவையில்லை. உன்னிடம் சிந்திக்கும் திறனிருக்கிறதா? அது போதும். நான் காட்டும் வழியில் சிந்தித்துப் பார். வளரும் உன் அறிவு.
கேள்வி: ஒன்றைப்பற்றி என் அறிவை வளர்த்துக் கொள்வது எப்படி?
பதில்: ஒன்றைப்பற்றி அறியப்பட வேண்டியவைகளை அறியும்போது அதைப்பற்றிய உன் அறிவு வளரும்.
ஒன்றைப்பற்றி உன் அறிவை வளர்த்துக்கொள்ள அறியப்பட வேண்டியவைகள்:
1. அதன் பாகங்கள் எவை?
2. அதிலிருப்பது, மற்ற எதிலிருக்கிறது?
3. அதனோடு இணைந்திருப்பவைகள் எவை?
4. அதைப் பாதிப்பவைகள் எவை?
5. அதன் உருக்கள் எவை?
6. அதற்குப் பதிலாக இருக்கும் மாற்றுகள் எவை?
7. அதனால் ஏற்படும் பயன்கள் எவை?
.
.
.
விதிப்படி பொருளா? பொருட்படி விதியா? எதுவும் விதிப்படிதான் என்கிறது அறிவியல். விதிப்படிதான் விமானங்கள் உருவாக்கப்படுகின்றன. விதிப்படிதான் ஏவுகணைகளும், ராக்கெட்டுகளும் உருவாக்கப்படுகின்றன. விதிப்படிதான் ரயில் என்ஜினும், உன் இதயமும் இயங்குகிறது. நீ உண்ணுவது செரிப்பதும் விதிப்படிதான். விதிப்படிதான் நீயும், நீ அறிவதும். பூமி சூரியனைச் சுற்றுவதும் விதிப்படிதான். கணினிகள் இயங்குவதும் விதிப்படிதான். எதுவும் விதிப்படிதான் இயங்குகிறது. விதிப்படிதான் எதுவும் தோன்றி மறைகிறது. விதிப்படிதான் உன் பிறப்பும், இறப்பும். விதிப்படிதான் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. விதியறியாதவன் திட்டமிட்டு ஏவுகணைகளையும், விமானங்களையும், ராக்கெட்டுகளையும், ரயில் என்ஜின்களையும், கணிணிகளையும் உருவாக்குவதில்லை.
பொருளுக்குப் பொருள் மாறுபடும் எதுவும் விதியாகாது. விதி நேரத்திற்கு நேரம் மாறுபடக்கூடிதல்ல. இடத்திற்கு இடம் மாறுபடுவதும் விதியல்ல. விதியில் புதிய விதி என்றும், பழைய விதி என்றும் பாகுபாடில்லை. விதியில் புதுமையைப் புகுத்த முடியாது. புதியன புகுதலும் பழையன கழிதலும் என்பது பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். விதிக்குப் பொருந்தாது. தோன்றி மறைவது பொருள். விதி என்பது அப்படி தோன்றி மறையும் பொருளல்ல. விதியில், உன் விதி என் விதி என்ற பாகுபாடு கிடையாது. விதிப்படிதான் நீயும் நானும் தோன்றி மறைகிறோம். விதிப்படி தான் பொருட்கள் அசைகின்றன, நகர்கின்றன என்கிறது இயற்பியல்.