Archive for ஆகஸ்ட் 2011

இரண்டு மணிநேரம் படம் பார்க்காத போது வராத ஒரு உணர்வு, அரை மணிநேரத்தில் எடுக்கப்படும்
குறும்படங்களில் தோன்றாத உணர்வு, இரண்டு நிமிட விளம்பர படத்தில் தோன்றியது என்றால் அதற்கு காரணம், நிச்சயம் "இசைப்புயல் மட்டும் தான்" .இரண்டு நிமிடத்தில், "ஒரு ஜிம்னாஸ்டிக் பெண்"
"பாலத்தை கடக்கும் ஆசாமி" "நடனமாட துவங்குவதற்கு முன் தனது தந்தைக்கு கால் செய்யும்
சிறுவன்"  "படிகளில் ஏறும் சர்தார்ஜி" "தனது மனைவிக்கு இருசக்கர வாகனம் ஓட்ட சொல்லி தரும்
கணவன்"  "ரானுவ வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடும் சிறுவன்" "விமானம் ஓட்ட செல்லும் பெண்மனி" "பாராசூட் சாகசம் செய்யும் இளைஞன்" என ஒவ்வொன்றும் சிறு குறும்படங்களாக உருவெடுக்கின்றன . ஒரு சிறந்த விளம்பரம் நம் உணர்வை தூண்டும் வகையில் நீங்களும் பாருங்கள்.




உலக சினிமாவை பற்றி அனைவரும் எழுதி கொண்டு இருக்கும் பொழுது, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சினிமாக்கள் என ஒரு பகுதியை நான் எழுதப் போகிறறேன் .எழுத போகும் அனைத்து
 படங்களும் உலக சினிமாக்கள் கிடையாது தான் என்றாலும் . நான் எனக்கு தெரிந்ததை மட்டும் அல்லது நான் பார்த்த படங்களை பற்றி மட்டும் தான் எழுத போகிறேன் . முதன் முதலாக எழுத போவது "ரிதம்" படத்தை பற்றி.



புலி வேசம்

அடாசு திரைக்கதையையும் தனது திரைக்கதை யுக்தியினால் நல்ல திரைக்கதையாக மாற்றும் திறமை இயக்குனர் வாசுவிடம் உண்டு . ஆனால் விதி வலியது . தான் சிறுவயதில் இருந்து  காவல் காத்து வரும் பெண்னை காக்க நாயகன் போடும் வேசமே "புலி வேசம்"
நாயகன்  சிறுவயதில் தாய் தந்தையை இழந்தவன். அவனுக்கு அந்த ஊர் பெரிய மனிதர் இளவரசு அடைக்கலம் கொடுத்து தன் மகளை பாதுகாக்கும் பொறுப்பை கொடுத்து வளர்க்கிறார் .பெரியவர்கள் ஆனதும் தன் பெண்னிள் திருமனத்திற்கு தடை ஆர் கே தான் என நினைத்து ஆர்கேவை ஊரை விட்டு போக சொல்கிறார் இளவரசு .ஆனால் ஆர்கேவுக்கு தெரியாமல் அவருடனே நாயகியும் வந்து ஒரு விபத்தில் மாட்டிக்கொள்ள நாயகியை காப்பாற்ற ரௌடி
 அவதாரம் எடுக்கிறார் ஆர் கே முடிவு. என்ன என்பது கிளைமாக்ஸ்,.








ஆர் கே கிராமத்து கதாபாத்திரத்தில் நன்றாக இருக்கிறார். அவருக்கு அந்த கெட்டப்பும் நன்றாக பொருந்துகிறது .ஆனால் சிட்டியில் மாடர்ன் ரௌடியாக அவரது கெட்டப்பும், நடிப்பும், சுத்தமாக எடுபடவில்லை . ஆர்கே நாயகனாக நடிப்பதை தவிர்த்து விட்டு கேரக்டர் ரோல்களை தேர்ந்தெடுத்தால் இன்னும் நன்றாக நடிப்பார் என்பது எனது கருத்து . ஆர் கே நேரில் பார்க்க நன்றாக இருக்கிறார் ஆனால் படத்தில் தான் டெரராக இருக்கிறார் .

நாயகியாக திவ்யா அவரது கதாப்பாத்திரம் சின்னதாக இருந்தாலும் படத்தின் மையம் இவர் தான் என்பதாலும் சரியான தேர்வு .சதா படத்திற்கு தேவை இல்லை என்றாலும் இரண்டு பாடல்களுக்கு நடனமாடியுள்ளார் அதிலும் ஆர்கேவுடன் ஒரு டுயட் வேறு மிக தைரியசாலிதான் .

சதா எப்படி இந்த படத்திற்கு தேவை இல்லையோ அது போல் தான் கார்த்திக்கும் இந்த படத்திற்கு தேவை இல்லை .அதில்லாமல் ஆரம்ப காட்சிகள் சராசரி ரசிகனுக்கு புரியும் விதத்தில் இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாம் .நாயன் சிறுவயது முதல் தென்காசியில் இருப்பது போல் காட்டியிருக்கிறார்கள் ஆனால் அவர் படம் முழுவதும் மதுரை ஸ்லாங்கில் பேசுகிறார்.

மொத்தத்தில் ஆர்கேவின் துட்டில் வாசு வெளிநாடு சுற்றி பார்திருக்கிறார், பாடல்கள் வழியே .அது போல் ஆர்கேவின் ரௌடி கெட்டப்பில் இன்னும்
கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம். பாடல்களில் வாரேன் வாரேன் பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் நன்றாக இருந்தது ..







ரௌத்திரம்-குருவி பராவயில்லை


இது மாதிரி படங்களை பார்க்கும் போது தான் நமக்கு உரைக்கிரது .விஜய் எவ்வளவு நல்லவர் என்று .அவராவது பராவயில்லை குருவி படத்தில் இடைவெளியில் இருந்து தான் அடிக்க ஆரம்பிப்பார் .ஆனால் படத்தில் முதல் காட்சியில் இருந்து கடைசி என்டு கார்டு போடும் வரை படத்தில் யார் யாரோ அடித்துகொண்டே இருக்கிறார்கள். .நம்மால் தான் தியேட்டரில் உட்கார முடியவில்லை.ஹேன்சம் ஹிரோக்கள் ஆக்சன் அவதாரம் எடுப்பது புதிது இல்லை என்றாலும் அது எல்லோர்க்கும் வொர்க் அவுட் ஆவதில்லை விதிவிலக்கு விஷால்.

நாயகன் அநியாயம் எங்க நடந்தாலும் பொங்கி எழுபவர்.அப்படி எழுவதால் நேரும் பிரச்சனைகள் தான் படம் ..படத்தின் ரசிக்க தக்க அம்சம் என்றால் படத்தின் சன்டைக்காட்சிகள் தான். படத்தில் என்னை கவர்ந்தவர்கள் என்றால் அது சிறிது நேரம் வரும் பிரகாஷ்ராஜ் மற்றும் சத்தியன் .பாடல்களில் மாலை நேரம் பாடல் கேட்பதற்கும் நன்றாக இருந்தது படமாக்கப்பட்ட விதமும் அருமை.கிளைமாக்ஸ் மரண மொக்கை கடைசி காட்சி டிவிஸ்ட் தான் என்றாலும் அது தேவையற்றது .

போட்டா போட்டி 50/50

போட்டா போட்டி 50/50

தேனி பக்கம் ஒரு கிராமம் அங்கே இரண்டு மைனர்கள்.அவர்களின் மாமா பன்னையாருக்கு ஒரே மகள்,அவளை யார் கட்டுவது என்று இருவருக்குள்
போட்டி,கிரிக்கெட் போட்டியில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்கு தான் பெண் என்று சொல்கிறார். ஒரு டீமிற்கு மயில்சாமி கோச்சாகவும், மற்றொரு டீமிற்கு சடகோப்பன் ரமேஷ் கோச்சாகவும் வர, யார் ஜெயித்தார்கள் என சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார்கள்
படத்தின் மிகப்பெரிய பலமே திரைக்கதைதான் முதல் பாதி கதைக்குள்ளே போகமலேயே நம்மை சிரிக்க வைத்து இடைவெளி வரை கொண்டு வந்து விடுகிறார்கள் .கிளைமாக்ஸ் கிரிக்கெட் போட்டியை இன்னும் சற்று விறுவிறுப்பாக படமாக்கியிருந்தால் மற்றொரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கும் .சடகோப்பன் ரமேஷ் நல்ல புதுவரவு ,ஒரிஜினல் குரலா என்று தெரியவிலிலை மற்றபடி நடிப்பதற்கு ஒன்றும் இல்லை .படத்தில் நடித்திருப்பவரகள் என்றால் இருவர் தான் அவர்கள் கொடை காரணாக வரும் “மைனர்” தான் பெயர் தெரியவில்லை மனிதர் பின்னி எடுத்துள்ளார் .அதுவும் கிளைமாக்ஸில் அவர் ரன் எடுக்காததற்கு சொல்லும் காரணம் காமெடி கதகளி ..அவரது அடிபொடியாக வரும் “அவதார்” அட்டகாசமான நடிப்பு அவர் பேசி குழப்பும் ஒவ்வொறு வார்த்தையும் மனிதர் பாடிலேங்வேஜ்ஜில் பின்னி எடுத்திருக்கிறார் .நாயகி பாந்தமாக இருக்கிறார் . முன்பகுதியில் வரும் காதல் பாடலும் அதனை படமாக்கியவிதமும் அருமை .இரண்டாம் பாதியில் வரும் வெளிநாட்டு பெண்கள் வரும் பாடலும் அதை எடிட் செய்த விதமும் செம மொத்தத்தில் ஜாலியாக ஒரு படம் பார்ப்பதற்கு நிச்யம் கேரண்டி.



திரையரங்ககுகளை பற்றி எழுதிய பதிவுக்கு அமோகமான வரவேற்பு கொடுத்து,என்னையும் பதிவுகளில் ஒரு அங்கதினராக ஆக்கியிருப்பது மகிழ்சி அளிக்கிறது .பின்னூட்டம் மற்றும் பார்வையிட்ட அணைத்து நண்பர்களுக்கும் நன்றி.பதிவினை எழுத தூண்டியஅட்ராசக்கைக்கு சிறப்பு நன்றி  மதுரை வந்த பத்து வருடத்தில் படம் பார்த்த திரையரங்குகளை பற்றி குறிப்பிட்டு இருத்தேன். இது நான் வளர்ந்த திருநெல்வேலி ஊரில் உள்ள திரையரங்குகளை பற்றி பார்வை.
தமிழ்நாட்டிலேய இரண்டு ஊர்களில் மட்டும் தான் இன்றளவிலும் குடிதண்ணீர் நன்றாக இருக்கும் ஒன்று கோவை. ஆனால் அங்கு கூட பத்து நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வரும் ஆனால் இன்றும் தினமும் தண்ணீர் வரும் ஊர் ஒன்று உன்டென்றால் அது நெல்லை மாவட்டம் தான் .நான் நெல்லைக்கு சென்று கிட்டதட்ட ஒரு வருடம் ஆகிறது .அதனால் இது டாப்டென் திரையரங்குள் அல்ல நான் பார்த்து ரசித்த திரையரங்குகளை பற்றியது .

சென்ரல்

நெல்லையின் மிகப்பெரிய திரையரங்கம் சுமார் 1000 மேற்ப்பட்டோர் இந்த திரையரங்கில் அமர்ந்து படம் பார்க்கலாம் தியேட்டர் கலையரங்கம் போல் அமைந்திருக்கும் இந்த திரையரங்கில் என்றென்றும் காதல் படம் பார்த்துள்ளேன் டிக்கெட் 3.90 மற்றும் 7 இப்பொழுது தியேட்டரை மூடி விட்டார்கள் கடைசியாக இந்த திரையரங்கில் பார்த்த படம்காதலர் தினம் பெரும்பாலும் சத்தியராஜ், கார்த்திக் படங்களை அதிகம் வெளியிடுவார்கள் .


 
செந்தில்வேல்

நான் முதன் முதலாக எனது தம்பியுடன் தனியாக சென்று பார்த்த திரைப்படம்காட்சில்லா அந்த திரைப்படத்தை பாளையங்கோட்டை செந்தில்வேல் திரையரங்கத்தில் தான் பார்த்ததேன் .அந்த திரையரங்கில் படம் பார்ப்பதற்கு முக்கியமான காரணம் டிக்கெட் விலை, அப்பொழுது எல்லாம் பெண்கள் டிக்கெட் 2.60 காசு ஆண்கள் டிக்கெட் 5.60 நான் முதல் முதலாக வீட்டுக்கு தெரியாமல் தனியாக சென்று பார்த்த படம்ஹலோ இந்த திரையரங்கத்தில் தான் கடைசியாக பார்த்த படம் கமல் நடித்தபம்மல் கே சம்மந்தம் இப்பொழுது தியேட்டர் இயங்கி வருகிறதா என்று தெரியவில்லை.

பூர்ணகலா

அப்பொழுது எல்லாம் காதலுக்கு மரியாதை, சூர்ய வம்சம், கன்னுபடபோகுதய்யா ,போன்ற தொடர் வெற்றி படங்களை மட்டுமே திரையிடுவார்கள். திரையரங்கு ஸ்கிரின்களை சுற்றி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் .நாயகன் நாயகி முக்கியமான சண்டைக்காட்சிகளின் போது விளக்குகளை எரிய விடுவார்கள் நச்சென்று இருக்கும். ஆனால் இப்பொழுது நினைத்தால் சிரிப்பாக இருக்கும் .இந்த தியேட்டரின் ஒரு கொடுமை என்னவென்றால் படம் போடுவதற்கு முன்பே முதல் வகுப்பு டிக்கெட்டை கொடுத்து விடுவார்கள். படம் போட ஆரம்தித்த பின்புததான் இரண்டாம் வகுப்பு மற்றும் முன்றாம் வகுப்பிற்கான டிக்கெட்டுகளை கொடுப்பார்கள் எனவே இந்த திரையரங்கில் திரைப்படம் பார்ப்பதை பெரும்பாலும் தவிர்ப்பேன் கடைசியாக பார்த்த படம் ஸ்பைடன் மேன் 1

ரத்தினா டாக்கிஸ்

நெல்லையின் மையப்பகுதில் அமைந்ததுள்ளது .அப்பொழுது ரஜினி படங்கள் என்றால் அது ரத்னாவில் தான் திரையிடுவார்கள். தியேட்டர் படுமோசமாக இருக்கும், நான்அருணாச்சலம்முத்து போன்ற படங்களை இங்கு தான் பார்த்ததேன் ரஜினி ரசிகனாக மாறியது கூட இங்கிருந்து தான் என நினைக்கிறேன், டைசியாக பார்த்ததுஜெமினி

பார்வதி

நெல்லையில் கலைவடிவத்துடன் அமைக்கப்பட்டிருக்கும் முதல் திரையரங்கம் இதுவே .முன் பக்கத்தில் தாமரை இலை போல அமைத்து அதனுள் இருக்கைகளை அமைத்திருப்பார்கள் .எனக்கு தெரிந்தநாட்டாமை அதிக நாட்கள் ஓடியது அது மட்டுமல்லாது அம்மன் வகையரா படங்ககை இந்த திரையரங்கில் தான் திரையிடுவார்கள் கடைசியாக பார்த்த திரைப்படம் நினைவில் இல்லை இந்த திரையரங்கமும் தற்பொழுது இல்லை திருமண மண்டபமாக மாற்றிவிட்டார்கள். 



பேரின்பவிலாஸ்

பூர்ணகலா திரையரங்கதின் பின் உள்ளது மிகசிறிய தியேட்டர் ஆனால் ஒலி அமைப்பு அட்டகாசமாக இருக்கும் டைட்ானிக் படம் 50 நாட்களுக்கு மேல் ஓடியது .பெரும்பாலும் ஆங்கில டப்பிங் படங்களை வெளியிடுவார்கள் தலைவரின்படையப்பா படத்தை இங்கு தான் பார்த்தேன் கடைசியாக பார்த்ததுகஜினி.

அருணகிரி

சிறந்த தியேட்டர் மெயின்டன்ஸ் உள்ள ஒரே திரையரங்கம் இது தான் தியேட்டரின் உள் கட்டமைப்பு அருமையாக இருக்கும் இங்கும் ஆங்கில் டப்பிங் படங்களைதான் அதிகளவில் திரையிடுவார்கள் நான் ஜேம்ஸ் பாண்டின் தி வேல்ட் ஸ் நாட் எனாப் படத்தை இங்கு தான் பார்த்தேன்.

ராயல் திரையரங்கு

நெல்லையின் மிகப்பழமையான திரையரங்கு பெரும்பாலும் சிறு பட்ஜெட் படங்களைதான் அதிகமாக திரையிடுவார்கள் நெல்லையின் நடுப்பகுதில் அமைந்துள்ளதால் எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் இங்குகாதலா காதலா படத்தை பார்த்துள்ளேன் கடைசியாக பார்த்ததுமன்மதன்


ராம் முத்துராம்

இந்த தியேட்டருக்கு நெல்லையின் முதல்டிடிஸ் திரையரங்கம் முதல் இரண்டு ஸ்கீரின் திரையரங்கம் அதுவும் இரண்டுமே 70mm திரையரங்கம் பல சிறப்புகள் உண்டு . முதல் முதலாக டிஆரின்மோனிசா என் மோனாலிசா திரைப்படத்தையும் விஜயகாந்த் நடித்தஎங்கள் அண்ணா திரைப்படத்தையும் திரையிட்டார்கள் இந்த திரையரங்கத்தில் தான்முதல்வன் திரைப்படத்தை பார்த்தன் ஒளி அமைப்பு நன்றாக இருக்கும் .இந்த திரையரங்கம் வந்த பின்புதான் மற்ற அணைத்து திரையரங்குளிலும வரிசையா டிடிஸ் ஒலி அமைப்பு செய்யப்பட்டது கடைசியாக பார்த்தது கமல் நடித்தபஞ்சதந்ததிரம் .




பாம்பே தியேட்டர்

நெல்லையின் சிறந்த ஒளி மற்றும் ஒலி அமைப்புள்ள திரையரங்கம் புறநகர் பகுதியில் அமைந்துள்ளதால் ஏரியா பெரிய மனிதர்கள் பெரும்பாலும் இந்த திரையரங்குக்குதான் வருவார்கள் .இந்த திரையரங்கத்தில் நான் ஒரே ஒரு படத்தைதான் பார்த்திருக்கிறேன் அது அர்ஜூன் நடித்தஏழுமலை.




இது போக லெட்சுமி திரையரங்கு கணேஷ் திரையரங்கு போன்றவற்றில் படங்களை பார்த்துள்ளளேன் ஆனால் அவை எல்லாம் இப்பொழுது இருக்கிறதா என்று தெரியவில்லை


எனக்கு சிறு வயதில் இருந்தே திரையரங்கத்தின் மேல் தனிக்காதல் உண்டு .அந்த காதல் தான் இதனை எழுத காரணம் அடுத்த பதிவு கோவை திரையரங்குளை பற்றியது.