மதுரை டாப் டென் தியேட்டர்கள்


மதுரைக்கு வந்து ஏறக்குறைய பத்து வருடங்களாககிறது .இந்த பத்து வருடத்தில் மதுரையின் அனைத்து திரையரங்கிலும் நான் படம் பார்த்து இருக்கிறேன் நான் படத்தை பார்க்க மட்டும் திரையரங்கம் செல்லவதில்லை . நான் ஒரு திரையரங்க காதலன் .நான் திரையரங்கை வரிசை படுத்தி எழுத போவதில்லை ஒரு படத்தை பார்ப்பதற்கான ஆர்வத்தை உண்மையில் திரையரங்குளே தூண்டுகின்றன .

பிக் சினிமா கணேஷ்

மதுரை திரையரங்கம் என்றாலே சட்டென நினைவுக்கு வருவது  பிக் சினிமா கணேஷ் தான் , தெப்பக்குளம் அருகில் உள்ளதுரிலையன்ஸ்” திரையரங்கில் உள்ள சிறப்பம்சம் என்னவெனில், அதன் பராமரிப்பு தான் .பதினொரு மணி என்றால் சரியாக படம் போடுவார்கள் .படம் போடும் முன் தேசிய கீதம் இசைப்பது இந்ந திரையரங்கில் மட்டும் தான் டிக்கெட் விலை 40, 50 புதுப்படம் திரையிட்டால் 70ஆரண்ய காண்டம்” இந்த திரையங்கில் தான் பார்த்தேன் ரிலையன்ஸ் தியேட்டரின் குறை என்னவெனில் திண்பண்டங்கள் நன்றாக இருந்தாலும், அதிக விலை வைத்து விற்பதுசென்னை”கோவையை” காட்டிலும் குறைவுதான் என்றாலும் மதுரை வாசிகளுக்கு அது சற்று அதிகம் தான் . இவர்களின் மற்றொரு திரையரங்கம் மதுரை அண்ணாநகர் பகுதியில் பிக் சினிமாஜாஸ் அர்ஸ்” என்று இரண்டு திரையரங்கமாக செயல் படுகிறது முன்னரே சொன்னது போல தான் அர்ஸ் திரையரங்கில் பெரும்பாலும் ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களையே திரையிடுவார்கள் டிக்கெட் விலை எப்பொழுதும் 85 மட்டுமே


தங்கரீகல்

மதுரை திரையரங்கம் என்று சொல்லிவிட்டு இந்த திரையங்கை பற்றி எழுத வில்லை என்றால் எப்படி. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அருகில் இருப்பதால் எப்பொழுதும் கூட்டம் இருந்தது கொண்டே இருக்கும் ஒரு காலத்தில் அட்டகாசமான ஆங்கில படங்களை மட்டுமே திரையிடுவார்கள்.பின்னர் தியேட்டர் கை மாறியதால் இப்பொழுது புதுப்படங்களை மட்டுமே திரையிடுகிறார்கள்  அரங்கத்தின் சிறப்பம்சமே சுத்தம் தான், அதுவும் படத்தின் இறுதி வரை குளிர் சாதணம் இயங்கி கொண்டே இருக்கும் .எந்த அளவுக்கு மெயின்டனோ அந்த அளவிற்கு டிக்கெட் கட்டணத்தையும் திண்பண்டங்களின் கட்டணத்தையும் உயர்த்திவிடுவார்கள் .டிக்கெட் விலை மினிமன் 100 புதுப்படம் என்றால் 150 கடைசியாக இந்த திரையரங்கில் எந்திரன் திரைப்படம் பார்த்தேன்.

 

சக்தி சினிமாஸ்
இது மதுரை மேலமாசி வீதி கீழமாசி வீதி சந்திப்பு அருகில் உள்ளது. இந்த திரையரங்கம் இரண்டு திரையரங்கமாக இருந்தது இப்பொழுது ஒன்றாக்கி விட்டனர் .தியேட்டர் பராமரிப்பு என்பது இங்கு தான் பார்த்து கற்று கொள்ள வேண்டும் சவுண்ட் சிஸ்டம் மிக அருமையா இருக்கும் ஆனால் டாய்லெட் பராமரிப்பில் இன்னும் கொஞ்சம் கவனிக்கலாம் டிக்கெட் விலை 40 ,50 புது படம் திரையிட்டால் 80



தமிழ் ஜெயா

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் அமைந்ததுள்ளது .இந்த பகுதியில் ஆயுத படை மைதானம் போலிஸ் குவாட்டரஸ் போன்றவை அமைந்ததுள்ளதால் ,புது படம் திரையிட்டால் மட்டுமே கூட்டம் இருக்கும் .இரண்டு திரையரங்கம் என்பதால் புது படங்களை மாற்றி போட்டு ஓட்டுவார்கள் சவுண்ட் சிஸ்டம் மற்றும் சீட்களை தற்பொழுது சீரமைத்து இருக்கிறார்கள் .தியேட்டரில் கேண்டினும் டாய்லெட்டும் படு கேவலமாக இருக்கும் டிக்கெட் விலை 80 100 புது படம் என்றால் 100 150

குரு

மதுரை காளவாசல் அருகில் உள்ளது மிக பழமையான திரையரங்கு, அவதார் படத்தை ஒட்டி தியேட்டரில் 4k புரஜக்டரில் திரையிடுகிறார்கள் தியேட்டரின் சிறப்பம்சம் என்வெனில் அருமையான தியேட்ர் பராமரிப்பு அழகான கேண்டின் தற்பொழுது அதிகமாக 3D படங்களை திரையிடுகிறார்கள் திரையரங்கில் ஒளி ஒலி அமைப்பு துள்ளியமாக இருக்கும் டிக்கெட் விலை எப்பொழுதும் 100  120


மாப்பிள்ளை வினாயர் மாணிக்க வினாயகர்

இந்த திரையரங்கமும் மதுரை காளவாசல் பகுதியில் தான் உள்ளது. மிக பழமையான திரையரங்கம் .திரையரங்கத்தின் உள்ளே வினாயகர் சிலை அமைத்து இருப்பார்கள் .ஒரு காலத்தில் வெறும் ஆங்கில படங்களை மட்டுமே திரையிடுவார்கள் அதிலும் ஒரு திரையரங்கில் ஆங்கிலத்திலும் மற்றொறு திரையரங்கில் ஆங்கில படத்தை தமிழ் டப்பிங்கிலும் வெளியிடுவார்கள் ஓரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் படம் போட வேண்டி சில அமைப்பினர் திரையரங்கினுள் வெடிகுண்டை வெடிக்க செய்ததால் ,அதிலிருந்து தமிழ் படம் திரையிடுகிறார்கள் டக்கெட் விலை 50  60  புதுப்படம் என்றால் 100 கடைசியாக குவாட்டர் கட்டிங் படம் பார்த்தேன் கேண்டின் தியேட்டர் மெயின்டன்ஸ்
படு கேவலமாக இருக்கும்



 அம்பிகா காம்ளக்ஸ்

மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ளது இரண்டு ஸ்கிரின் தியேட்டர் என்பதால் நல்ல கூட்டம் உள்ள தியேட்டர் .இந்த தியேட்டரின் குறை என்ன என்று கேட்டால் எல்லாம் தான் என்பேன் .தியேட்டர் நன்றாக விஸ்திரமாக தான் இருக்கும் ஆனால் சிட் குட்டை குட்டையாக இருக்கும். பாதி பேருக்கு அடுத்தவனின் மண்டை தான் தெரியும் அதே மாதிரி கேண்டினில் வாயில் வைக்க முடியாத ஐட்டங்களை மட்டுமே வைத்திருப்பார்கள் .பாத்ரும் பக்மெல்லாம் ஒதுங்கவே முடியாது டிக்கெட் 60 70 புதுப்படம் என்றால் 100

 மதி

மதுரை ஆரப்பாளையம் பஸ்டாண்ட் பகுதில் அமைந்ததுள்ளது .மதுரையின் ஒரே 70mm  தியேட்டர் . தியேட்டர் மிக பெரியதாக இருக்கும் ஆனால் தொடர்ந்து மொக்கை படங்களை மட்டுமே திரையிடுவார்கள் .கடைசியாக இந்த திரையரங்கில் நடுநிசி நாய்கள் படம் பார்த்தேன் .ஏசி போடும் பொழுது ஒரு கப் அடிக்கும் பாருங்கள் .அது எப்படி என்று ஆராயக்கூடாது அனுபவிக்கனும் டிக்கெட் விலை 50 60 கேண்டின் மற்றும் டாய்லெட் மெயின்ட்னஸ் படு கேவலம்





 பிரியா காம்ளக்ஸ்



மதுரை கே கே நகர் பகுதியில் உள்ளது .ஒரு காலத்தில் மதுரையிலேயே மிகப் பெரிய காம்ளக்ஸ்சாக இருந்தது. சரியான தியேட்டர் மெயின்ட்டன்ஸ் இல்லாததால் மொத்தம் உள்ள மூன்று திரையரங்ககுகளில் மிகப்பெரிய திரையாங்கன சினிப்பிரியா 70mm மூடி விட்டார்கள் பெரும்பாலும் மொக்கை படங்களை தான் திரையிடுவார்கள் பிகர்கள், ஆன்டிகளை அழைத்து செல்ல அருமையான இடம். யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் ரெண்டு மணி நேரம் புல் என்ஜாய்மெண்ட் டிக்கெட் விலை 40 50






மணிஇம்பாலா

மதுரை புறநகர் திருப்பரங்குன்றம் அருகே உள்ளது. தியேட்டரை சுற்றி மன்னர் கல்லுரி ,தியாகராஜர் கல்லுரி, மதுரை காமராஜர் பல்கலைகழகம், நாடார் கல்லுரி, என இருப்பதால் எப்பொழுதும மினிமம் கூட்டத்திற்கு கேரண்டி. மொத்தம் மூன்று ஸ்கிரின்கள் உள்ளதால் படத்தை மாற்றி மாற்றி திரையிட்டு அட்ஜஸ்ட் செய்து கொள்வாரகள் .டிக்கெட் விலை 70 100 புதுப்படம் என்றால் 150 பெரிய திரையரங்கை விட இரண்டு சின்ன திரையரங்கில் படம் பார்க்க நன்றாக இருக்கும்




தேவி கலைவாணி

இது திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகரில் அமைந்து இருக்கிறது .எங்கள் வீட்டின் மிக அருகில் என்பதால் மட்டுமல்ல புதுப்படம் திரையிட்டாலும் கூட குறைந்த விலை, அழகான கேண்டின் ,நல்ல டாய்லெட், என்று தியேட்டர் மிக அருமையாக இருக்கும் சிறிய தியேட்டர் என்றாலும் தியேட்டர் மெயின்ட்டென்ஸ் என்பது அட்டகாசமாக இருக்கும்.









இது போக சிறு பட்ஜெட் தியேட்டர்களாக அறியப்படுவது மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அண்ணாமலை மதுரை காமராஜர் சாலையில் உள்ள அம்பிகை திரையரங்கு போன்றவற்றை பற்றி சொல்லாம் .அடுத்த பதிவு திருநெல்வேலி பகுதி திரையரங்குள் பற்றியதாக இருக்கக்கூடும்



 

15 Comments:

  1. கேரளாக்காரன் said...
    What About Jazz and Arsh
    லிவிங்ஸ்டன் said...
    thalivarea athuvum big cinima theaters than
    hasan said...
    i love பிரியா காம்ளக்ஸ்...!
    பிரசன்னா கண்ணன் said...
    Dont forget Ram Victoria :-)
    ஜிஎஸ்ஆர் said...
    மதுரை சிந்தாமனி தியேட்டர் முன்பு இருந்ததே இப்போது இருக்கிறதா? அங்கு DTS சிஸ்டம் நன்றாக இருந்தது முன்பு இப்போது எப்படி?
    Unknown said...
    தலைவரே நானும் மதுரை காரன் தான் இப்ப ஒரு எட்டு வருடங்களாக திருச்சில இருக்கேன். பாத்து பதினைந்து வருசத்துக்கு முன்னாடி மதுரைல எனக்குப் பிடித்த தியேட்டர் னா சரஸ்வதி , மதி அப்புறம் மாப்பிள்ளை விநாயகர் தான் இப்ப நீங்க சொன்னப்புறம் தான் தெரியுது இப்போதைய நிலைமை . நன்றி தலைவரே !
    லிவிங்ஸ்டன் said...
    பிரசன்னா ராம் விக்டோரியாவில் இப்ப எல்லாம் அக்கா ஷகிலா படம் மட்டும் தான் போடுகிறார்கள்
    லிவிங்ஸ்டன் said...
    ஜிஆர்எஸ் சிந்தாமனி திரையரங்கத்தை முடி பல வருடங்களாகிவிட்டது கடைசியாக தூள் படம் வெளியானதாக நினைவு
    லிவிங்ஸ்டன் said...
    நன்றி சேது
    kobiraj said...
    உங்கள் பதிவை பார்த்த பின் நானும் யாழில் உள்ள தியேட்டர் பற்றி எழுதலாம் என தோன்றுகிறது .உங்கள் நட்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பரே
    லிவிங்ஸ்டன் said...
    thanks gobi nenngalum yean nanban rhan
    பெயரில்லா said...
    .thalai, vetri theatre engae la ??????
    தியாகராஜன் said...
    சக்தி சினிமாஸ் மேல மாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் இருக்கிறது, மேல மாசி வீதி வீதி கீழ மாசி வீதி சந்திப்பில் அல்ல நண்பரே!
    vignesh said...
    sir nanum madurai than na oru vilambara compeny vachu iruken...........
    vignesh said...
    sir na madurai than na oru vilambara compeny vachu iruken....unga todrbu enaku venum......

Post a Comment