மதுரை பேமஸ் ஜிகர்தன்டா 02.08.2011






மதுரை பேமஸ் ஜிகர்தன்டா 02.08.2011

இந்த வார நிகழ்ச்சி

இந்த வாரம் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கொலைகள் நடந்த வண்ணம் உள்ளன. அதிலும் குறிப்பாக பா.மா.க மாநில துணைச்செயலாளர் மதுரையின் மையப்பகுதியில் கொடுரமாக கொல்லப்பட்ட செய்தி அதிர்சியின் உச்சம். கள்ளக்காதலுக்கான கொலைகளும் மதுரையில் அதிகரித்துள்ளது .... பொய் வழக்குகளை போடுவதை கண்டித்து திமுகவினர் இந்த வாரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் கைதாகி அன்றே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். திங்களன்று எவரையுமே ஆர்ப்பாட்டம் செய்ய விடமால் நேரடியாக பேருந்ததில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ரசித்த பாடல்

 சமீபத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ள "மருதவேலு" படப் பாடலை கேட்க நேர்ந்தது அதில் வரும் "மருதாணி செவக்கயிலே" பாடல் முதல் முறை கேட்கும் போதே முனுமுனுக்க வைக்கிறது .அட்டகாசமான கிராமிய நடையில் பட்டையை கிளப்புகிறது அதிலும் தஞ்சை செல்வியின் குரல் ""அழகு""




ரசித்த காணொலி

வோடபோன் ஜீஜீ விளம்பரங்கள் எந்த அளவிற்கு கேச்சிங்காக இருக்குமோ அதே போன்ற உணர்வு தற்பொழுது ஐடியா ௩ஜி விளம்பரத்தை கானும் போதும் ஏற்பட்டது .அவர்களின் மக்கள் தொகை குறைப்பிற்கான ஐடியாவை பாருங்கள் நிச்சயம் அட்டகாசம்.








யாதுமற்றவன் என்ற பெயரை சில காரணங்களுக்காக மாற்றி உள்ளேன் .பொதுவான செய்திகளை வெளியிட வேண்டியுள்ளதால்  தளத்தின் பெயரை தி மதுரை டைம்ஸ் என்று மாற்றியுள்ளளேன் இன்னும் சில மாதங்களில் டொமைனாக மாற உள்ளதால் இந்த பெயர் மாற்றம்
அட்ராசக்க தனது பதிவில் திருப்பூர் திரையரங்கங்களை பற்றி எழுதியுள்ளார் அதை படித்ததிலிருந்து எனக்கும் மதுரை திரையரங்குகளை பற்றி எழுதும் ஆர்வம் வந்துள்ளது எனவே எனது அடுத்த பதிவு அதுவாக இருக்கக்கூடும்

0 Comments:

Post a Comment