எவ்வளவு நாட்களாகி விட்டது இது மாதிரி ஒரு படம் பார்த்து .உலக சினிமாக்களை உருவி தமிழுக்கு ஏற்றார் போல் மாற்றி கொடுத்து விட்டு, ஏதே இவனுகளே ரும் போட்டு யோசித்த மாதிரி பில்லடப் பன்னும் இந்த காலத்தில். முதல் பாகம் சுமாராக இருந்தாலும், அதில் உள்ள அணைத்து குறைகளையும் களைந்து விட்டு, ஒரு அட்டகாசமான காமெடி திரில்லரை கொடுத்ததற்காக ராகவா லாரண்சுக்கு ஒரு ராயல் சல்யூட் .
கதை
கதைக்காக பெரிதாக ஒன்றும் மெனக்கடவில்லை . போன படத்தின் கதையேதான் பயந்த சுபாவம் உள்ள லாரண்ஸ் மீது . எதிரிகளின் சதியால் கொல்லப்பட்டவரின் ஆவி புகுந்து எதிரிகளை வதம் செய்வது தான். ஆனால் அடாசு கதையையும் அட்டகாசமான திரைக்கதையினால் சரி செய்துவிடலாம், அதுவே இப்படத்திலும் நடந்துள்ளது.
முதல் காட்சி நகைச்சுவை அடுத்த காட்சி திரில்லர் என்று கலந்து கட்டி அடித்திருக்கிறார் லாரன்ஸ் .
கோவை சரளா
தமிழ் படங்களில் ஒரு காலத்தில் அதாவது மனோரமாவிற்கு பிறகு ஒரு தரமான காமெடி மற்றும் குணசித்திர நடிகை என்றால் அது சராளா மட்டுமே. படத்தில் முதல் மதிப்பெண் இவருக்குதான் காட்சிக்கு காட்சி, தியேட்டரையே கலகலக்க வைக்கிறார் "குறிப்பாக இடைவெளிக் காட்சியில்பேய் இருக்கிறதா என சோதிக்கும் மூன்று இடங்கள். அப்பொழுது அவரின் வசன வெளிப்பாடு அட்டகாசம்" .அதே போல் லாரண்ஸ் மீது மூன்று பேய்களும் மாறி மாறி வரும் காட்சிளில் சான்சே இல்லை கோவை சரளா மேடம் ராக்ஸ் யூ
திவ்யதர்ஷினி
கோவை சரளாவுடன் இவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி படத்தின் உண்மையான நாயகன் நாயகிகள் இவர்கள் இருவர் மட்டும் தான். முழு படத்தையும் இவர்கள் இருவரும் இல்லாமல் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை .கனவனுக்கு பயந்து நடுங்குவதும் இடைவெளிக்காட்சியிலும் இவரது நடிப்பு அதிஅற்புதம் .
சரத்குமார்
தமிழ்நாட்டில் கணிசமான ரசிகர்களை கொண்டவர், ஒரு கட்சியின் தலைவர், மற்றும் எம் எல் ஏ. ஆனாலும் இன்றைய டாப் நடிகர்கள் நடிக்க தயங்கும் கேரக்டரில் சரத்குமாரை கானும் போது மிகவும் மகிழ்சியாக இருந்தது, அவருக்கான பகுதியை சிறப்பாக செய்துள்ளார் .
ராகவா லாரண்ஸ்
பொதுவாக படத்தில் பல பகுதிகளிலும் மேற்பார்வை செய்து நடிப்பது என்பது சிரமமான காரியம், ஆனால் லாரண்ஸ் இதனை மிக எளிமையாக செய்துள்ளார் குறிப்பாக முன்று பேய்களின் ரியாக்சனை அவர் செய்து காட்டும் இடங்களில் மனிதன் பின்னி பெடெலெடுத்துவிட்டார், "திரையரங்கில் அனைவரும் ரதித்த காட்சி"
மேலும் படத்த்ல ஸ்ரீமன், லட்சுமிராய் போன்றோர் நடித்துள்ளனர் .படத்தின் பலம் இசை படத்தொகுப்பு மற்றும் அட்டகாசமான சிஜி எந்த ஓரு இடத்திலும் பார்வையாளர்களை யோசிக்கவே விடாமல் ஒரு அட்டசாசமான காமெடி திரில்லரை கொடுத்ததற்காக இயக்குனருக்கு எனது வாழ்த்துகள்
திரையரங்க கும்மாங்குத்து
எனது பின் இருக்கையில் இருந்தவர் இடைவெளி காட்சியின் போது மிரண்டு விட்டார். என்னை பார்த்து "சார் உங்களுக்கு பயமா இல்லையா என்று கேட்டார் ?" மனதிற்குள் நினைத்துக்கொண்டேன், நானெல்லாம் கனிபல் ஹோலோ கோஸ்ட், ஹாஸ்டல், சா ,போன்ற படங்களையே இரண்டு தடவை பார்த்தவன் என்று .
உலக காப்பிக்கே ஐம்பத்தி இரண்டு மதிப்பெண் தரும் ஆனந்த விகடன் இது போன்ற படங்களுக்கு ஐம்பது மதிப்பெண்ணாவது தரவேண்டும் என்பதே எனது விருப்பம்..