Archive for ஜூலை 2011





எவ்வளவு நாட்களாகி விட்டது இது மாதிரி ஒரு படம் பார்த்து .உலக சினிமாக்களை உருவி தமிழுக்கு ஏற்றார் போல் மாற்றி கொடுத்து விட்டு, ஏதே இவனுகளே ரும் போட்டு யோசித்த  மாதிரி பில்லடப் பன்னும் இந்த காலத்தில். முதல் பாகம் சுமாராக இருந்தாலும், அதில் உள்ள அணைத்து குறைகளையும் களைந்து விட்டு, ஒரு அட்டகாசமான காமெடி திரில்லரை கொடுத்ததற்காக ராகவா லாரண்சுக்கு ஒரு ராயல் சல்யூட் .

கதை
கதைக்காக  பெரிதாக ஒன்றும் மெனக்கடவில்லை . போன படத்தின் கதையேதான் பயந்த சுபாவம் உள்ள லாரண்ஸ் மீது . எதிரிகளின் சதியால் கொல்லப்பட்டவரின் ஆவி புகுந்து எதிரிகளை வதம் செய்வது தான். ஆனால் அடாசு கதையையும் அட்டகாசமான திரைக்கதையினால் சரி செய்துவிடலாம், அதுவே இப்படத்திலும் நடந்துள்ளது.
முதல் காட்சி நகைச்சுவை அடுத்த காட்சி திரில்லர் என்று கலந்து கட்டி அடித்திருக்கிறார் லாரன்ஸ் .

கோவை சரளா
தமிழ் படங்களில் ஒரு காலத்தில் அதாவது மனோரமாவிற்கு பிறகு ஒரு தரமான காமெடி மற்றும் குணசித்திர நடிகை என்றால் அது சராளா மட்டுமே. படத்தில் முதல் மதிப்பெண் இவருக்குதான் காட்சிக்கு காட்சி, தியேட்டரையே கலகலக்க வைக்கிறார் "குறிப்பாக இடைவெளிக் காட்சியில்பேய் இருக்கிறதா என சோதிக்கும் மூன்று இடங்கள். அப்பொழுது அவரின் வசன வெளிப்பாடு அட்டகாசம்" .அதே போல் லாரண்ஸ் மீது மூன்று பேய்களும் மாறி மாறி வரும் காட்சிளில் சான்சே இல்லை கோவை சரளா மேடம் ராக்ஸ் யூ

திவ்யதர்ஷினி
 கோவை சரளாவுடன் இவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி படத்தின் உண்மையான நாயகன் நாயகிகள் இவர்கள் இருவர் மட்டும் தான். முழு படத்தையும் இவர்கள் இருவரும் இல்லாமல் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை .கனவனுக்கு பயந்து நடுங்குவதும் இடைவெளிக்காட்சியிலும் இவரது நடிப்பு  அதிஅற்புதம் .

சரத்குமார்

தமிழ்நாட்டில் கணிசமான ரசிகர்களை கொண்டவர், ஒரு கட்சியின் தலைவர், மற்றும் எம் எல் ஏ. ஆனாலும் இன்றைய டாப் நடிகர்கள் நடிக்க தயங்கும் கேரக்டரில் சரத்குமாரை கானும் போது மிகவும் மகிழ்சியாக இருந்தது, அவருக்கான பகுதியை சிறப்பாக செய்துள்ளார் .

ராகவா லாரண்ஸ்
பொதுவாக படத்தில் பல பகுதிகளிலும் மேற்பார்வை செய்து நடிப்பது என்பது சிரமமான காரியம், ஆனால் லாரண்ஸ் இதனை மிக எளிமையாக செய்துள்ளார் குறிப்பாக முன்று பேய்களின் ரியாக்சனை அவர் செய்து காட்டும் இடங்களில் மனிதன் பின்னி பெடெலெடுத்துவிட்டார், "திரையரங்கில் அனைவரும் ரதித்த காட்சி"

மேலும் படத்த்ல ஸ்ரீமன், லட்சுமிராய் போன்றோர் நடித்துள்ளனர் .படத்தின் பலம் இசை படத்தொகுப்பு மற்றும் அட்டகாசமான சிஜி எந்த ஓரு இடத்திலும் பார்வையாளர்களை யோசிக்கவே விடாமல் ஒரு அட்டசாசமான காமெடி திரில்லரை கொடுத்ததற்காக இயக்குனருக்கு எனது வாழ்த்துகள்


திரையரங்க கும்மாங்குத்து

எனது பின் இருக்கையில் இருந்தவர் இடைவெளி காட்சியின் போது மிரண்டு விட்டார். என்னை பார்த்து "சார் உங்களுக்கு பயமா இல்லையா என்று கேட்டார் ?" மனதிற்குள் நினைத்துக்கொண்டேன், நானெல்லாம் கனிபல் ஹோலோ கோஸ்ட், ஹாஸ்டல், சா ,போன்ற படங்களையே  இரண்டு தடவை பார்த்தவன் என்று .

உலக காப்பிக்கே ஐம்பத்தி இரண்டு மதிப்பெண் தரும் ஆனந்த விகடன் இது போன்ற படங்களுக்கு ஐம்பது மதிப்பெண்ணாவது தரவேண்டும் என்பதே எனது விருப்பம்..


ஊழலும் மனித உரிமை மீறலே !!!

ஊழலும் மனித உரிமை மீறலே -
மதுரை மாவட்டகாவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்,

புதுடெல்லியில் அமைந்துள்ள தலித் பவுண்டேசன் - மக்கள்
கண்காணிப்பகத்துடன் இணைந்து தலித் மக்களுக்கு ஏற்படும் மனித உரிமை
மீறல்களைக் கண்காணித்து, சட்ட உதவிகள் வழங்குவது குறித்து பத்து நாள் பயிற்சி,மதுரை பில்லா மையத்தில் இன்று தொடங்கியது.இப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களை, தலித் பவுண்டேசன் அமைப்பின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் வரவேற்றார். பயிற்சியின் நோக்கம்
குறித்து மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் வழக்கறிஞர் ஹென்றிதிபேன் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்,  பயிற்சி
முகாமினை குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்து சிறப்புரை நிகடிநத்தினார்.மேலும் அவர் கூறியதாவது ஊழல் என்பது மிகப்பெரிய மனித உரிமையாகும்.காவல்துறையில் உள்ளவர்கள் லஞ்சம் வாங்குவது அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.அரசு காவலர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொடுத்துள்ளது. எனவே லஞ்சம் வாங்குவது என்பது தேவையற்றது. பல்வேறு பிரச்சனைகளில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் வெகுதூரத்திலிருந்து தனது பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதற்கு காவல்நிலையம் வருகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட சூடிநநிலையில் இருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பிரச்சனைகளுக்கு காவல்துறை தீர்வு காணுவதற்கு பதிலாக அவர்களிடமே லஞ்சம் பெறுவது மிகக் கடுமையான குற்றமாகும். காவல்துறை என்பது இந்திய நாட்டின்
சட்டத்தை அமுல்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கிறது. மக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்படுவதையே பிரதானமான நோக்கமாக கொண்டதாகும். லஞ்சத்தை ஒழிப்பதற்கு மக்களும் உறுதுணைகாக இருக்கவேண்டும். மக்கள் அனைவரும் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு லஞ்சம் கொடுத்து தீர்வு காணமாட்டோம் என்றும் யாருக்கும் லஞ்சம் கொடுக்கமாட்டோம் என்ற நிலையை மக்கள் எடுத்தால் லஞ்சம் முற்றிலும் ஓழிந்துவிடும் என வலியுறுத்தினார்.

வாடிநவுரிமை, சமத்துவ உரிமை, மாண்புரிமை, சுதந்திர உரிமை மற்றும்
 சட்டங்கள் குறித்த பயிற்சி, பாதிக்கப்பட்ட தலித் மக்களைச் சந்தித்து
அவர்களுக்கான உரிமைகளைத் தெரிவித்து அவர்களுக்கான சட்ட உதவிகளைச் செய்வதற்கான பயிற்சியினை வழக்கறிஞர். ஹென்றி திபேன் வழங்குகிறார். கல்வி உரிமைகள் குறித்து மரியசூசை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து ஜி.கணேசன், பெண்களுக்கான உரிமைகள் குறித்து சிந்திய திபேன் ஆகியோர் வழங்குகிறார்கள் .





மனித உரிமைக் கல்வி   நிறுவனத்தின் சார்பில் மாநகராட்சிப் பள்ளிகளின் மனித உரிமைக் கல்வி ஆசிரியர்களுக்கு "பாகுபாடு" குறித்த பாடத்திட்ட பயிலரங்கு மதுரை டவுன்ஹால் ரோட்டில் அமைந்துள்ள  நியூ  காலேஜ்  ஹவுஸில்  நடந்தேறியதுஇப்பயிலரங்கிற்கு  மாநகராட்சிக்  கல்வி அலுவலர் திரு. வைத்தியநாதன் தலைமைப் பெற்று துவக்கி வைத்தார். அவர்தம் வாழ்த்துரையில் ஆசிரியர்கள் உரிமைகளையும் கடமைகளையும் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இனப்பாகுபாடு பாலியல் பாகுபாடுகள் கூடாது என்றும் பள்ளியில் மாணவர்களிடம் பண்பாட்டை உண்டாக்க   வேண்டும்   சமுதாயத்தில்   இணைந்து   செயல்படக்   கூடியவராக   மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.








தேசியக் குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் கல்வி உரிமைச் சட்டத்தின் தமிழக சிறப்பு பிரதிநிதி திரு. ஹென்றி திபேன் குழந்தைகளின் இலவச கட்டாய உரிமைச் சட்டம் குறித்த  கருத்துகளை  வழங்கி  உரையாடல்  மூலம்  சட்டத்தின்  நடைமுறை  மற்றும்  உண்மை
நிலையினை விளக்கி கூறினார். மேலும்   தமிழக பிரதிநிதி   என்ற முறையில் பள்ளி நிர்வாகக் குழு அனைத்து  மாநகராட்சிப்  பள்ளிகளிலும்  மைக்குமாறு  கேட்டுக்  கொண்டார்கடந்த  ஆண்டின் மனித  உரிமை  சார்ந்த  நிகழ்வுயினை  திருமரிய  சூசை  அவர்கள்  மீளாய்வு  செய்தார்.
இப்பயிற்சிக்கான  ஏற்பாட்டை  திருமிகுஉமாராணிமாநகாரட்சி  பள்ளி  ஒருங்கிணைப்பாளர், திருமிகு. லீலாவதி, திருமிகு.சர்மிளா திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்தனர்.

தெய்வ திருமகள் -தந்தை மகள் கவிதை


தெய்வ திருமகள் -தந்தை மகள் கவிதை


அயல் நாட்டு படங்களின் மூலத்தில் இருந்து எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை. காரணம் அதை நமது பிராந்தியத்திற்கு ஏற்றவாறு மாற்ற தெரியாமல் மாற்றியிருப்பார்கள்.அப்படி இல்லாமல்,மூலக்கதையை மட்டும் எடுத்து கொண்டு நமது சமூக அமைப்புகளுக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து, அதில் படத்தின் வெற்றிக்கான பார்முலாக்களையும் சேர்த்து படம் எடுப்பது சில இயக்குனர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிறது.அதில் விஜய் வெற்றி பெற்றுவிட்டார் என்றே நினைக்கிறேன் .
படத்தின் கதை பற்றி எல்லோரும் அறிந்ததே என்றாலும்,படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் திரைக்கதையும்,விக்ரமின் அற்புதமான நடிப்பும்மட்டுமே .
படத்தில் பாரட்டுகுறியவர்கள்

விக்ரம்

விக்கரமின் நடிப்பை பற்றி சொல்ல என்ன இருக்கிறது. அவர் ஒரு மகா நடிகர் என்பதற்கு அவரின் முந்தைய படங்களே சாட்சி படத்தின் பல காட்சிகளில் என் மனம் கணத்து விட்டது .தன் குழந்தை பிறந்தவுடன் காணச்செல்கையில், குழந்தையை கொஞ்சி கொண்டு இருக்கும் போது மனைவி இறந்த செய்தி அவரிடம் சொல்ல படுகிறது .அப்பொழுது வெளிப்படும் முகபாவமும் பின்னனி இசையும் . அதே போல் "ஆரிரோ" பாடலிலும்  மனிதன் பின்னி எடுத்துள்ளார் .முக்கியமாக அந்த உட்சகட்ட கிளைமாக்ஸ் காட்சியில், குழந்தையும், விக்ரமும் சைகையால் பேசிக்கொள்ளும் காட்சி தியேட்டரில் அனைவரும் கைதட்டி ரசித்த காட்சி..அனைவரின் கண்களிலும் குறைந்த பட்சம் ஒரு துளி கண்ணீராவது வரும் .விக்ரமின் ஒவ்வொரு படங்களுமே அவருக்கு ஒரு மைல்கல்தான் என்றாலும்,அவரது கேரியரில் இது ஒரு உட்சம் என்று தாராளமாக சொல்லலாம் .

குழந்தை சாரா

முதல் முறையாக பார்க்கும் போதே குழந்தையை அள்ளி எடுத்து கொஞ்ச வேண்டும் என்று தோன்றுகிறது . அமலா பாலுக்கும் குழந்தைக்கும் இடையே நடக்கும் காட்சிகள் அருமை பல காட்சிளில் குழந்தையின் முக பாவங்கள் அட்டகாசபடுத்துகிறது

அனுஷ்கா

அருந்ததிக்கு பிறகு அனுஷ்கா நடித்தது இந்த படத்தில் தான் .வானம் படத்தில் ஓவர் மேக்கப் போட்டு முகத்தை நாராசப்படுத்தியிருப்பார்கள். ஆனால் இந்த படத்தில் குளோசப் காட்சிகளில் கூட அவரின் முகம் களையாகவும், அம்சமாகவும் உள்ளது. இந்த படத்தல் இருந்து அவரின் தீவிர ரசிகனாகி விடுவேனா என்று அஞ்சுகிறேன் .

அமலா பால்

சொல்லிக்கொள்வது போல் காட்சிகள் மற்றும் வசனம் இல்லாவிட்டாலும் காந்த கண்ணழகி ஏதோ செய்கிறார்.

ஒளிப்பதிவு-நிரவ்ஷா

ஒளிப்பதிவு குறிப்பிட்டு சொல்ல கூடியவற்றில் ஒன்று. அனைத்து ஷாட்களும் உலகத்தரம் வாய்ந்தவை. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்,"விழிகளிலே" பாடலில் அனுஷ்காவின் அழகை காட்டியதும் அந்த பாடலை எடுத்த விதமும் .

படத்தொகுபு -ஆண்டனி

படத்தின் திரைக்கதையை எந்த இடத்தல் இருந்து கூறினாலும் பார்வையாளனை குழப்பாமல் இருப்பதே சிறந்த படத்தொகுப்பு, அவ்வகையில் செவ்வனே செயல் பட்டு இருக்கிறார் ஆண்டனி.
இசை ஜிவி பிரகாஷ்

பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட் என்பதால்  பின்னனி இசை அற்புதமாக இருந்தது.

மொத்தத்தில் அருமையான ஒரு மென் சோக கதயை படித்தது போன்ற உணர்வு நன்றி இயக்குனர் விஜய்
தெய்வ திருமகள் -தந்தை மகள் கவிதை


 

ஆனந்த விகடனுக்கு என்ன ஆச்சு?-anantha vekadan


இந்த வாரம் ஆனந்த விகடனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை,படித்து முடிப்பதற்குள் "சிரித்து சிரித்து" வயிறு வலி வந்து விட்டது.
ஒவ்வொறு பேட்டியும் அட்டகாசம். விகடன் விமர்சனத்தில் வழக்கமாக சீரியசமாகவே விமர்சிப்பார்கள், ஆனால் வேங்கை படத்திற்கு அவர்களின் விமர்சனம் படித்திருந்தால் தனுஷ்சும் ஹிரியுமே சிரித்திருபார்கள்.அடுத்து நம்ம டிஆரின் பேட்டி "அய்யய்யோ என்னால சிரிப்ப அடக்கவே முடியலை", பேட்டியில் ரொம்ப டயர்டா இருக்கீங்களே ஏன் கேட்டா? "நான் டயர்டா இல்லை டயர்ட்ல இருக்கேன் - ஒரு தலை படத்துக்காக" இது எப்படி இருக்கு!! அடுத்த அட்டாக் சிரிப்பு  மதுரை ஆதினம்.அதுவும் அவரின் இங்கிலீஸ் பேட்டி, அதுவும் அந்த ஜேம்ஸ் பாண்ட் கெட்டப்பும் போலீஸ் கெட்டப்பும் அசத்தல் ரகம். அடுத்ததாக தமிழக காங்கிரஸ் தங்கபாலு ஒவ்வொறு கேள்விக்கும் மனுசன் பிச்சி உதறுறார் .சாம்பிளுக்கு சில  "கேள்வி -தோத்துருவோம்னு தெரிஞ்சே ஏன் கூட்டணி வச்சிங்க?"அதுதான் கூட்டணி தர்மம் ( நீங்க எப்பவுமே இப்படிதானா இல்ல இப்படித்தான் எப்பவுமேவா?)கேள்வி -கூடா நட்பு கேடில் விளையும் கலைஞர் சொல்லி இருக்காறே உங்க கருத்து. பதில்-நானும் அதை படிச்சேன்,ஆனா அவரு யாருக்காக சொன்னாருன்னு இது வரைக்கும் தெரியலை.அடுத்து  பவர் ஸ்டார் சீனிவாசன் கேள்வி -சினிமாவில் உங்கள் இலக்கு தான் என்ன? பதில் -"பாலா பதறனும்" "அமிர் அலறனும்" "சசி இன்டஸ்டிரிய விட்டே ஓடனும்"பவர் ஸ்டார் ராக்ஸ்.......

மதுரை பேமஸ் ஜிகர்தன்டா 14.07.2011

பிளாக் ஆரம்பித்து ஒரு வருடம் கழித்து தான் எழுதவே ஆரம்பித்தேன், மெது மெதுவாக ஒவ்வொன்றாக கற்று இந்த வருடம் தான் பதிவு எழுத தோன்றியது . பிரபல பதிவர்களின்  "கொத்து புரோட்டா" "சான்விச் நான் வீச்" "இட்லி வடை" போன்றவற்றை எழுதும் போது எல்லாம், நானும் ஏன் எதுத கூடாது? என்று என்னியது உண்டு (ஆமா இவரு பெரிய வெட்டி வௌக்கெண்ணெய் அப்படியே எழுது தள்ளிட்டாலும்!!! )அப்படின்னு நீங்க கேக்குறது புரியுது இருந்தாலும் நான் எழுதுற முடிவில் தீவிரமா இருக்கேன் . முடிவுபன்ளிட்டேன் ஆனா என்ன பேர்ல எழுதுறதுன்னு ஒரு வாரமா ஒரே குழப்பம், அப்படி
இப்படின்னு யோசிச்சு "மதுரை பேமஸ் ஜிகர்தன்டா" ன்னு பேர்ல எழுதுறதுன்னு முடிவு பன்னி இருக்கேன் .வாரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக எழுத முயல்கிறேன்.



மதுரை பேமஸ் ஜிகர்தன்டா 14.07.2011


இந்த வாரம் நிகழ்ச்சி

கோடைகாலம் முடிந்து பள்ளிகள் ஆரம்பித்து விட்டாலே நலசங்கங்கள் அனைத்தும் "நீ நான்" என்று போட்டி போட்டுக்கொண்டு நோட்டு புத்தகங்கள் வழங்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் பெரும்பாலான சங்கங்கள் ."மதம்" மற்றும் "சாதி" சார்ந்தே செயல்படுகிறது.ஆனால் சுமார் ௨௦ தேர்ந்தெடுத்த வசதி வாய்ப்பு இல்லாத மாநகராட்சி பள்ளிகள், அதிலும் சுமார் "௨௦௦௦" ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள் போன்றவற்றை கொடுத்து வருகிறது  ௨௩! ஆண்டுகளாக அந்த அமைப்பின் பெயர் "கண்ணதாசன் நற்பனி மன்றம்" அமைப்பின் தலைவர் "மனிதத்தேனி
ரா.சொக்கலிங்கம்" மேலும் சாதனைகள் தொடர வாழ்த்துவோம். இவரை பற்றி விரிவான பதிவு விரைவில் .


 ரசித்த பாடல்

சமீபத்தில் கேட்டு ரசித்த பாடல் "வாகைசூடவா" . படத்தில் அனைத்து பாடல்களும் சிறப்பாக உள்ளது குறிப்பிட்டு சொல்ல
வேண்டும் என்றால் "செங்க சூலக்காரா" "தஞ்சாவூர் மாடத்தி"மற்றும்  "ஆனா ஆவன்னா" போன்ற பாடல்களை முதல் முதலாக கேட்ட பொழுதே பிடித்து விட்டது. விமலுக்கு மற்றொரு வெற்றிபடமாக அமையக்கூடும் .அதே போல் தெய்வதிருமகள் படத்தில் வரும் விழிகளில் ஒரு வானவில் பாடலும் அட்டசாசமாக இருக்கிறது.
கேட்டு ரசியுங்கள்

ரசித்த காணொலி



இந்த பாடலை அனைவரும் பன்பலையில் கேட்டு ரசித்திருக்கலாம் இன்று வரை இது என்ன திரைப்படம் எனக்கு தெரியவில்லை .ஆனால் பாடலை பாடிய பவதாரனியின் குரலுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.





இந்த வாரம் கேள்வி

சமச்சீர் கல்வி வருமா வராதா?

இந்த வாரம் காமெடி

"திமுகவிற்காக இரண்டு பதிவிகள் காத்திருக்கின்றன"-பிரதமர் மன்மோகன் சிங்
"கலைஞர்-ரைட்டு அடுத்த ஆப்புக்கு ரெடி பன்னிட்டாரு"





மென் தொலைக்காட்சி விளம்பரம்

மென் தொலைக்காட்சி விளம்பரம்

சிறுவன் தில்சன் கொலை வழக்கில் முதியவர் ராம்ராஜ்பாண்டியன் கைது
செய்தியை கேள்விபட்டபோது .எனக்கு தோன்றிது இது தான் "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" அவரது வாக்குமூலத்தில் அந்த சிறுவன் இதற்கு முன்பு பலமுறை இந்த மாதிரி செய்துள்ளதாகவும், தான் பல முறை கண்டித்துள்ளதாகவும் சம்பவத்தன் கோபத்தில் சுட்டதாகவும் கூறியுள்ளார் .நண்பரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன் "உங்கள் வீட்டில் உள்ள மரத்தில் ஒரு சிறுவன் இது போல செய்து விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று ?" என்ன ரொம்ப கோவம் வந்துச்சுன்னா அவனை புடிச்ச ரெண்டு அடி அடிச்சு இனி மேல் அப்படி பன்னக்கூடாதுன்னு சொல்வேன்னு சொன்னார் .இது தான் மனித இயல்பு,கோபத்தின் தன்னை மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. நீங்கள் பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருக்கிறீர்கள், உங்களது அருகில் ஒருவன் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்டு கொண்டு வருகிறான், நீங்கள் சாந்தமானவராக இருந்தால் பொறுத்து கொள்வீர்கள். சற்று கோபக்காரராக இருந்தால் அவனிடம் சத்தம் போட்டு சொல்வீர்கள்.ராம்ராஜ் பாண்டியனும் அந்த ஒரு நிலையில் தான் இருந்திருப்பார் என்பது எனது கருத்து .அவரின் மேல் இவ்விதமான குற்றசாட்டுகள் வைக்கப்படுவது .அவர் ஒரு ராணுவ வீரர் என்பதால் தான் .அவரது தவறை நியாயப்படுத்துவது எனது நோக்கமல்ல, மாறாக தவறு அவர் மீது மட்டும் தான் என கூறுவதை தான் தவறென்கிறேன் .நேற்று பையனின் தாயார் ஒரு தொலைக்காட்சியில் பேட்டி அளித்துள்ளார், அதில் "எனது வலி தவறு செய்தவருக்கும் புரிய வேண்டும், எனவே அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.சரியான வார்த்தை  .ஆனால் இழப்பிற்கு இழப்பு என்பது எப்படி பாடமாகும் ..

anwar

பொதுவாக மலையாளப் படங்களை எனக்கு பிடிக்காது காரணம், ஒரே மாதிரியான திரைக்கதை அமைப்பை கொண்ட படங்களாகவே அது அமைந்து இருக்கும்.ஆனால் பதிவுகளில் சில படங்களை பற்றி அட்டகாசமாக எழுதப்பட்டிருக்கும். அப்படி டவுன்லோட் செய்து பார்த்த படங்கள், ""உருமி"" ""4பிரண்ட்ஸ்""
"நீலதாமரை"" "பிரான்சியேட்டன் அன்டு தி சைன்ட்" "கதா பறையும் போல" "கதா பறையுன்னு"  ஆனால் இது போன்ற படங்கள் அனைத்துமே இயல்பு வாழ்கையை பிரதிபலிப்பது போலவே அமைந்தது இருக்கும், அப்படி இல்லாமல் மலையாளத்தில் ஒரு நல்ல அதிரடி திரைப்படம் பார்க்க வேண்டும் என்பது எனது நெடுநாளைய ஆசை, அந்த ஆசையை முழுவதுமாக பூர்த்தி செய்த படம் அன்வர்.

பிருத்விராஜ் ஒரு முஸ்லீம் அவனது அப்பா அம்மா தங்கை என்று அழகான வாழ்கையை வாழ்ந்து வருபவர். அவரது தங்கையின் தோழியான மம்தா மோகன்தாஸை காதல் செய்கிறார்.தன் தங்கையின் திருமணத்திற்காக துணி எடுக்கும் போது கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறுகிறது .அதில் தந்தை,தாய்,தங்கை, என மூவரையும் இழக்கிறார்.இதில் ஆத்திரமடையும் அவர் அதற்கு காரணமான தீவிரவாதிகளை பலிவாங்க துடிக்கிறார் . காவல்துறை ஆணையர் பிராகஷ்ராஜின் துனையுடன், தீவரவாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு  கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளை எவ்வாறு பலி தீர்த்தார், என்பதை பரபரப்பான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார் ..

படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் தமிழுக்கு அறிமுகமானவர்களே, அதனால் படமும் நமக்கு மிகவும் பிடித்தகாகி விடுகிறது .படத்தில் முக்கியமான நடிகர்களில் ‘லால் பிராகஷ்ராஜ்‘ ‘நித்யா’ ‘மேனன் மம்தா மோகன் தாஸ்’ போன்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள் .

லால்

முஸ்லீம் தீவிரவாதியாக சிறந்த நடிப்பு, பிரகாஷ்ராஜ் அவரை கைது செய்த பின் கேட்பார் "நான் ஏன் உங்களை கைது செய்து இருக்கேன்னு தெரியுமா"  அதற்கு லால் "நல்லா தெரியும் நான் ஒரு முஸ்லீம் அதனால் தான்"  என்பார் அட்டகாசமான வசனம்

பிருத்விராஜ்

பிருத்விராஜை தமிழ் படங்களில் சற்று காமெடியான கதாபாத்திரத்தில் பார்த்து விட்டு இது போன்ற சீரியாசான கேரக்டரில் மனிதர் சும்மா அசர வைக்கிறார் .தன் குடும்பத்தை இழந்த சோகத்தில் படம் முழுவதும் கோபம் கொண்ட இளைஞனாக சிறந்த நடிப்பை அளித்துள்ளார் .கடைசி காட்சியில் பிருத்விராஜ் ராஜ் பேசும் வசனம்  ""கோவை குண்டு வெடிப்பால் உங்கள் இயக்கத்து வேண்ணா வெற்றி கிடைச்சுருக்கலாம் ஆனால் நான் இழந்தது உண்மையான முஸ்லீம்னா யாருன்னு சொல்லி கொடுத்த என் அப்பாவை என் குடும்பத்தை""

பிரகாஷ்ராஜ்

இது போன்ற வேடங்கள் பிராஷ்ராஜ்க்கு அல்வா சாப்பிடுவது போல் ஆனால் பிராஷ்ராஜை ஏன் கொல்ல வேண்டும்? அது தான் சற்று நெருடலாக இருந்தது .

மம்தா மற்றும் வித்யா மேனன்

படத்தில் நாயகிக்கான பங்களிப்பு மிகக்குறைவு இது போன்ற படங்களில் நாயகியே தேவையில்லை என்பது தான் எனது கருத்து படத்தில் இரண்டு பாடல்களுக்கு உதவியிருக்கிறார்.

வித்யா மேனனை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை பாப்பாவின் போட்டோவை மட்டுமே நான் ஒரு மணி நேரம் பார்ப்பேன்.படம் பார்த்தற்கு அவரும் ஒரு காரணம் என்றால் மிகையாகது .

திரைக்கதை

படத்தின் அடிநாதமே திரைக்ககைததான், ஏனெனில் "மதம்" பற்றிய படம் எடுக்கும் பொழுது காட்சி அமைப்புகளில் நிறைய கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் இயக்குனர் படாத பாடு பட வேண்டும்.படத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வசனங்கள் அதிகமாக காணப்படுகிறது .படத்தின் முதல் பாதி முழுவதும் சிறைச்சாலையில் நடப்பது போல் காட்டப்பட்டாலும் .தொய்வில்லாத திரைக்கதையினால் படம் நம்மை அதனுடே அழைத்து செல்கிறது , பாடல்கள் பிற்பாதி நீளத்திற்காக மட்டுமே சேர்க்கப்பட்டு இருக்கிறது அதிலும் அந்த திருமணப்பாடல் .வித்யா மேனன் என்னுடைய  செல்போனில் தினமும் இரவு அந்த பாடல் தான் ஒலிக்கிறது ナ.


நேரம் கிடைத்தால் கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள்


வேங்கை-குட்டி சிங்கம்



ஹரியின் வழக்கமான மசாலா

ஊரே மதிக்கும் பெரிய மனிதர் ராஜ்கிரன், அவரின்  ஒரே மகன் தனுஷ். ராஜ்கிரனின் ஆதரவால் MLA வாக இருப்பவர் பிராகஷ்ராஜ். இதனால் பிராகாஷ்ராஜால் பணம் சம்பாதிக்க முடிவதில்லை .இதனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போது ராஜ்கிரனை போட்டுதள்ள  துடிக்கிறார். ஊரில் நடக்கும் சிறு பிரச்சனையால் தனுஷ் திருச்சிக்கு அனுப்பப்படுகிறார், அங்கு தமன்னாவை பார்த்ததும் காதலில் விழுகிறார் . ராஜ்கிரனை வீழ்த்த  தனுஷை கொல்ல ஆள் அனுப்புகிறார் பிரகாஷ்ராஜ்.அந்த பொறுப்பு தமன்னா படிக்கும் கல்லுரியில் கேண்டின் வைத்து இருக்கும் ரவுடியிடம் வந்து சேர்கிறது .இதனிடையே பிரகாஷ்ராஜ் சட்ட விரோதமாக ஒரு நிலத்தை ரிஜிஸ்டர் செய்வதற்காக திருச்சி வருகிறார்.இதனை அறிந்த ராஜ்கிரன் பிராஷ்ராஜை கண்ணத்தில் அறைந்து அவமானப்படுத்தி இன்னும் ௧௫ நாட்களில் அடய பதவிவை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுகிறார்,தனுஷ் அந்த நிலத்தை அரசுக்கே
திரும்ப கொடுக்க செய்கிறார்.இதனால் மேலும் ஆத்திரமடையும் பிரகாஷ்ராஜ் தனுஷை கொல்ல ஆள் அனுப்புகிறார் ரௌடிகளை அடித்து சில பேரை
வெட்டியும் விடுகிறார் இதனால் ௧௫நாட்கள் ரிமான்டில் இருந்து வீடு திரும்கிறார் தனுஷ், இதற்குள் அமைச்சாராகி விடுகிற பிராகாஷ்ராஜ் ராஜ்கிரனிடம் வந்து ௩௦ நாட்களுக்குள் உன்னை கொல்வேன் என சவால் விடுகிறார் .பதிலுக்கு தனுசும் சவால் விட ஆடுபுலி ஆட்டம் ஆரம்பபம்.
கிளைமாக்ஸ் வழக்கம் போல தான் .

தனுஷ்
மாப்பிள்ளை படத்தை யாராவது பார்த்திருந்தால் ஆடுகளத்தில் நடித்தவரா இப்படி என்று கூறியிருப்பார்கள். ஆனால் இந்த படத்தில் அப்படி இல்லாமல் ஹரியின் நாயகன் போலவே நடித்துள்ளார் குறை சொல்ல முடியாத நடிப்பு.

தமன்னா
ரொம்ப நாட்கள் கழித்து தமன்னா .  வழக்கமாக படத்தில் அவரது லிப் சிங் நான் சிங்காகவே இருக்கும். இந்த படத்தில் பரவாயில்லை
கிளைமாக்ஸ் டிவிஸ்டில் இவரது பங்கும் உண்டு.

ராஜ்கிரன்
இதே நடிப்பை தாமிரபரணியில் பிரபு செய்து விட்டார். இவருக்கும் எதாவது சன்டைகாட்சி வைத்து விடுவார்கள் என்று நினைத்தேன், நல்ல வேளை 
அப்படி ஒன்றும் நடக்கவில்லை .

பிரகாஷ்ராஜ்
இன்னும் எத்தனை படத்தில் இதே மாதிரி நடிப்பார் என்று தெரியவில்லை .

கஞ்சா கருப்பு
இவருக்கு இன்னும் முழு நீள காமெடி எதுவும் ஒத்து வரவில்லை விவேக்கை கூட போட்டு இருக்கலாம்.


ஹரி
படம் வழக்கமான ஹரியின் படம் தான் , ஆனால் சாமி ,சிங்கம் ,போன்ற மாஸ்டர் ஹிட் லிஸ்டில் இதனை சேர்க்க முடியாது
இருந்தாலும் முதல் பாதி செம வேகம்.

பாடல்கள்

"காலங்காத்தாலே" ,"என்ன சொல்ல போற"போன்ற பாடல்கள் கேட்க நன்றாக உள்ளது. தனுஷ் ரசிகர்களுக்கான ""புடிக்கல"" பாட்டும் அது படமாக்கப்பட்ட விதமும் அருமை






""பண்யைாரும் பத்மினியும்""



இரண்டு மணி நேரம் எடுக்கும் குறும்படங்களை விட பத்து நிமிடத்தில் எடுக்கப்படும் குறும்படங்கள் மனதில் அலாதியான இன்பத்தை
ஏற்படுத்தக்கூடியவை .அன்மையில் பொழுது போகாமல் ""யூடியூப்பில்"" மேய்ந்து கொண்டிருந்த போது ,எதேச்சயாக என் கண்ணில் பட்டது இந்த குறும்படம் படத்தின் பெயர் ""பண்யைாரும் பத்மினியும்""  மிக அழகான கலை நேர்த்தி ,அட்டகாசமான நகைச்சுவை ,
நெகிழவைக்கும் கிளைமாக்ஸ்,, என அட்டகாசமான படைப்பு சமீபத்தில் நான் பார்த்த குறும்படங்களில் சிறந்தது என இதனை சொல்லாம்.
டிரைவர், பண்னையார், பண்னையாரின் மகள், மருமகன், என அனைவரும் சிறந்த நடிப்பை வெளிக்கொணர்ந்துள்ளனர்......
நீங்களும் பாருங்கள்.....


 

தேனிர் விடுதி -ஆறி போன டீ

சில படங்களின் கதை அடாசாக இருக்கும் ,ஆனால் அதில் நடித்த நடிகர்களின் நடிப்பு, பாடல்கள் போன்றவையால் படம்
அட்டகாசமாக வந்து இருக்கும் .
நேர்எதிர், சில படங்களுக்கு அட்டகாசமான கதை அமைந்து விடும் ஆனால் அதற்கு திரைக்கதை அமைக்கும் போது
இயக்குனர் சறுக்கி விடுவார்,. அதே தான் இங்கும் நடந்துள்ளது .இயக்குனர் களவாணி போல படம் எடுக்க நினைத்து இருக்கிறார்,ஆனால் தவறான துனை நடிகர் தேர்வினால்  படம் மொத்தமும் சொதப்பியுள்ளது .நாயகனும் அவரது அண்ணனும் பந்தல் அமைக்கும் கடை நடத்தி வருகிறார்கள் .படம் ஆரம்பம் முதலே  இருவரும் குடித்த வண்ணம் உள்ளனர் .பின்பு நாயகனுக்கும் நாயகிக்கும் காதல்வருகிறது  ,நாயகியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு பின்பு
சுபம் .....  """முடியலை!!!!!""

பூ களவாணி போன்ற படங்களுக்கு அழகான பாடல்களை கொடுத்தவர் தனது படத்திற்கு  பாடல்களில் சரிவர கவனம்
செழுத்தவில்லை


நாயகன் எப்பொழுது பார்த்தாலும் குடித்து கொண்டே இருக்கிறார் . நாயகியை திருமணம் செய்யவாவது
ஏதாவது புத்திசாலிதனமாக சிந்திப்பார் என்று பார்த்ததால், சவ சவ தான் .......

நாயகி பார்க்க அழகாக இருக்கிறார் .வயசுக்கு வந்ததை கண்டுபிடித்தற்காக நாயகன் மேல் காதலில் விழுகிறார் .

படத்தின் ஒரே ஆறுதர் நாயகனின் ""அண்ணனாக"" வருபவரின் நடிப்பு தான்  சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்
அவருக்கு ஜோடியாக வருபவரும் நல்ல புதுவரவு

நாயகியின்  தந்தை எதற்காக காதலை எதிர்கிறார் என்றால் தனது மகளை அமெரிக்க மாப்பிள்ளைக்கு கட்டி வைக்க
வேண்டும் என்பது தான்,,. சார் மாப்பிள்ளையாவது கொஞ்சம் நல்லா பார்த்து இருக்க கூடாது  சகிக்கலை ....

பார்த்து பார்த்து டையர்டான கதை, சில சில இடங்களில் சிரிக்க வைக்கும் நகைச்சுவை

படம் பார்க்கலாமா?????????


இன்னும் இரண்டு மாதங்களில் தொலைக்காட்சியில் கண்டிப்பாக பார்க்கலாம்,,,,,,,,,,,,,,,

transformers 3

படத்தின் கதை பற்றி நான் ஒன்றும் கூற போவது இல்லை .கூறினாலும் ஒன்றும் புரியாது .விளக்கமான கதை வேண்டுமெனில் இன்னும் சில நாட்களில் கணவுகளின் காதலனோ, கருந்தேலா, எழுதுவார்கள் ., அப்பொழுது படித்து தெரிந்து கொள்ளுங்கள் .. டிரான்ஸ்பார்மர்ஸின் முந்தைய இரண்டு பாகங்களை பார்க்காவிடினும் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஏனெனில் இது போன்ற படங்களுக்கு என்று டெம்ளேட் திரைக்கதை என்று உள்ளது .அதாவது
அமெரிக்கர்கள் எத்தனை வேற்று கிரகவாசிகள்  வந்தாலும், அவர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும், அதனை அழிக்க கூடிய ஆற்றலும் அறிவும் அவர்களிடம் மட்டுமே உள்ளது . இதுவும் அது போலான ஒரு டெம்ளேட் திரைப்படம் தான்...

எனவே படத்தில் கவர்ந்தவைகளை பற்றி பேசுவோம் முதலில் மனிதர்களை காப்பாற்றும் ஆட்டோபாட்கள்
வில்லனான டிசெப்டிகான்கள் ஆகியோர்களுக்கு இடையேயான சன்டைதான் படம் முழுவதும் .முதல் இரண்டு பாகத்தில் நடித்த நீக்கி விட்டு இந்த முறை புதிய நாயகியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் சில இடங்களில் நன்றாக காட்டுகிறார் (நடிப்பைதான்) படத்தின் முக்கிய அம்சம் சன்டைக் காட்சிகள்தான்,அட்டகாசம் அதுவும் ஹிரோ காரில் வந்து கொண்டு இருக்கும் போது திடிரென ரோபாட்டாக மாறி பின்பு காராக மாறும் இடம் டைரக்டர் டச்

அது போல் கிளைமாக்ஸ் காட்சியில் அந்த உடையும் கட்டிடத்தின் மேல் பாகத்தில் அனைவரும் உருண்டு வந்து பின்பு ,அப்படியே கட்டிடத்துள் வந்து விழுவது போன்ற காட்சி அட்டகாசம் ....வரைகலை தொழில் நுட்ப நேர்த்தி

பல காட்சிகள் அட்டகாசமாக இருந்தாலும் முதல் இரண்டு பாகத்தில் வந்த அதே கதைக்களன் என்பதாலும்
சில இடங்கள் சலிப்படைய வைக்கிறது