மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் சார்பில் மாநகராட்சிப் பள்ளிகளின் மனித உரிமைக் கல்வி ஆசிரியர்களுக்கு "பாகுபாடு" குறித்த பாடத்திட்ட பயிலரங்கு மதுரை டவுன்ஹால் ரோட்டில் அமைந்துள்ள நியூ காலேஜ் ஹவுஸில் நடந்தேறியது. இப்பயிலரங்கிற்கு மாநகராட்சிக் கல்வி அலுவலர் திரு. வைத்தியநாதன் தலைமைப் பெற்று துவக்கி வைத்தார். அவர்தம் வாழ்த்துரையில் ஆசிரியர்கள் உரிமைகளையும் கடமைகளையும் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இனப்பாகுபாடு பாலியல் பாகுபாடுகள் கூடாது என்றும் பள்ளியில் மாணவர்களிடம் பண்பாட்டை உண்டாக்க வேண்டும் சமுதாயத்தில் இணைந்து செயல்படக் கூடியவராக மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
தேசியக் குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் கல்வி உரிமைச் சட்டத்தின் தமிழக சிறப்பு பிரதிநிதி திரு. ஹென்றி திபேன் குழந்தைகளின் இலவச கட்டாய உரிமைச் சட்டம் குறித்த கருத்துகளை வழங்கி உரையாடல் மூலம் சட்டத்தின் நடைமுறை மற்றும் உண்மை
நிலையினை விளக்கி கூறினார். மேலும் தமிழக பிரதிநிதி என்ற முறையில் பள்ளி நிர்வாகக் குழு அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளிலும் மைக்குமாறு கேட்டுக் கொண்டார். கடந்த ஆண்டின் மனித உரிமை சார்ந்த நிகழ்வுயினை திரு. மரிய சூசை அவர்கள் மீளாய்வு செய்தார்.
இப்பயிற்சிக்கான ஏற்பாட்டை திருமிகு. உமாராணி, மாநகாரட்சி பள்ளி ஒருங்கிணைப்பாளர், திருமிகு. லீலாவதி, திருமிகு.சர்மிளா திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்தனர்.