இந்த வாரம் ஆனந்த விகடனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை,படித்து முடிப்பதற்குள் "சிரித்து சிரித்து" வயிறு வலி வந்து விட்டது.
ஒவ்வொறு பேட்டியும் அட்டகாசம். விகடன் விமர்சனத்தில் வழக்கமாக சீரியசமாகவே விமர்சிப்பார்கள், ஆனால் வேங்கை படத்திற்கு அவர்களின் விமர்சனம் படித்திருந்தால் தனுஷ்சும் ஹிரியுமே சிரித்திருபார்கள்.அடுத்து நம்ம டிஆரின் பேட்டி "அய்யய்யோ என்னால சிரிப்ப அடக்கவே முடியலை", பேட்டியில் ரொம்ப டயர்டா இருக்கீங்களே ஏன் கேட்டா? "நான் டயர்டா இல்லை டயர்ட்ல இருக்கேன் - ஒரு தலை படத்துக்காக" இது எப்படி இருக்கு!! அடுத்த அட்டாக் சிரிப்பு மதுரை ஆதினம்.அதுவும் அவரின் இங்கிலீஸ் பேட்டி, அதுவும் அந்த ஜேம்ஸ் பாண்ட் கெட்டப்பும் போலீஸ் கெட்டப்பும் அசத்தல் ரகம். அடுத்ததாக தமிழக காங்கிரஸ் தங்கபாலு ஒவ்வொறு கேள்விக்கும் மனுசன் பிச்சி உதறுறார் .சாம்பிளுக்கு சில "கேள்வி -தோத்துருவோம்னு தெரிஞ்சே ஏன் கூட்டணி வச்சிங்க?"அதுதான் கூட்டணி தர்மம் ( நீங்க எப்பவுமே இப்படிதானா இல்ல இப்படித்தான் எப்பவுமேவா?)கேள்வி -கூடா நட்பு கேடில் விளையும் கலைஞர் சொல்லி இருக்காறே உங்க கருத்து. பதில்-நானும் அதை படிச்சேன்,ஆனா அவரு யாருக்காக சொன்னாருன்னு இது வரைக்கும் தெரியலை.அடுத்து பவர் ஸ்டார் சீனிவாசன் கேள்வி -சினிமாவில் உங்கள் இலக்கு தான் என்ன? பதில் -"பாலா பதறனும்" "அமிர் அலறனும்" "சசி இன்டஸ்டிரிய விட்டே ஓடனும்"பவர் ஸ்டார் ராக்ஸ்.......