LIVI BABA
பொதுவாக மலையாளப் படங்களை எனக்கு பிடிக்காது காரணம், ஒரே மாதிரியான திரைக்கதை அமைப்பை கொண்ட படங்களாகவே அது அமைந்து இருக்கும்.ஆனால் பதிவுகளில் சில படங்களை பற்றி அட்டகாசமாக எழுதப்பட்டிருக்கும். அப்படி டவுன்லோட் செய்து பார்த்த படங்கள், ""உருமி"" ""4பிரண்ட்ஸ்""
"நீலதாமரை"" "பிரான்சியேட்டன் அன்டு தி சைன்ட்" "கதா பறையும் போல" "கதா பறையுன்னு" ஆனால் இது போன்ற படங்கள் அனைத்துமே இயல்பு வாழ்கையை பிரதிபலிப்பது போலவே அமைந்தது இருக்கும், அப்படி இல்லாமல் மலையாளத்தில் ஒரு நல்ல அதிரடி திரைப்படம் பார்க்க வேண்டும் என்பது எனது நெடுநாளைய ஆசை, அந்த ஆசையை முழுவதுமாக பூர்த்தி செய்த படம் அன்வர்.
பிருத்விராஜ் ஒரு முஸ்லீம் அவனது அப்பா அம்மா தங்கை என்று அழகான வாழ்கையை வாழ்ந்து வருபவர். அவரது தங்கையின் தோழியான மம்தா மோகன்தாஸை காதல் செய்கிறார்.தன் தங்கையின் திருமணத்திற்காக துணி எடுக்கும் போது கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறுகிறது .அதில் தந்தை,தாய்,தங்கை, என மூவரையும் இழக்கிறார்.இதில் ஆத்திரமடையும் அவர் அதற்கு காரணமான தீவிரவாதிகளை பலிவாங்க துடிக்கிறார் . காவல்துறை ஆணையர் பிராகஷ்ராஜின் துனையுடன், தீவரவாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளை எவ்வாறு பலி தீர்த்தார், என்பதை பரபரப்பான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார் ..
படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் தமிழுக்கு அறிமுகமானவர்களே, அதனால் படமும் நமக்கு மிகவும் பிடித்தகாகி விடுகிறது .படத்தில் முக்கியமான நடிகர்களில் ‘லால் பிராகஷ்ராஜ்‘ ‘நித்யா’ ‘மேனன் மம்தா மோகன் தாஸ்’ போன்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள் .
லால்
முஸ்லீம் தீவிரவாதியாக சிறந்த நடிப்பு, பிரகாஷ்ராஜ் அவரை கைது செய்த பின் கேட்பார் "நான் ஏன் உங்களை கைது செய்து இருக்கேன்னு தெரியுமா" அதற்கு லால் "நல்லா தெரியும் நான் ஒரு முஸ்லீம் அதனால் தான்" என்பார் அட்டகாசமான வசனம்
பிருத்விராஜ்
பிருத்விராஜை தமிழ் படங்களில் சற்று காமெடியான கதாபாத்திரத்தில் பார்த்து விட்டு இது போன்ற சீரியாசான கேரக்டரில் மனிதர் சும்மா அசர வைக்கிறார் .தன் குடும்பத்தை இழந்த சோகத்தில் படம் முழுவதும் கோபம் கொண்ட இளைஞனாக சிறந்த நடிப்பை அளித்துள்ளார் .கடைசி காட்சியில் பிருத்விராஜ் ராஜ் பேசும் வசனம் ""கோவை குண்டு வெடிப்பால் உங்கள் இயக்கத்து வேண்ணா வெற்றி கிடைச்சுருக்கலாம் ஆனால் நான் இழந்தது உண்மையான முஸ்லீம்னா யாருன்னு சொல்லி கொடுத்த என் அப்பாவை என் குடும்பத்தை""
பிரகாஷ்ராஜ்
இது போன்ற வேடங்கள் பிராஷ்ராஜ்க்கு அல்வா சாப்பிடுவது போல் ஆனால் பிராஷ்ராஜை ஏன் கொல்ல வேண்டும்? அது தான் சற்று நெருடலாக இருந்தது .
மம்தா மற்றும் வித்யா மேனன்
படத்தில் நாயகிக்கான பங்களிப்பு மிகக்குறைவு இது போன்ற படங்களில் நாயகியே தேவையில்லை என்பது தான் எனது கருத்து படத்தில் இரண்டு பாடல்களுக்கு உதவியிருக்கிறார்.
வித்யா மேனனை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை பாப்பாவின் போட்டோவை மட்டுமே நான் ஒரு மணி நேரம் பார்ப்பேன்.படம் பார்த்தற்கு அவரும் ஒரு காரணம் என்றால் மிகையாகது .
திரைக்கதை
படத்தின் அடிநாதமே திரைக்ககைததான், ஏனெனில் "மதம்" பற்றிய படம் எடுக்கும் பொழுது காட்சி அமைப்புகளில் நிறைய கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் இயக்குனர் படாத பாடு பட வேண்டும்.படத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வசனங்கள் அதிகமாக காணப்படுகிறது .படத்தின் முதல் பாதி முழுவதும் சிறைச்சாலையில் நடப்பது போல் காட்டப்பட்டாலும் .தொய்வில்லாத திரைக்கதையினால் படம் நம்மை அதனுடே அழைத்து செல்கிறது , பாடல்கள் பிற்பாதி நீளத்திற்காக மட்டுமே சேர்க்கப்பட்டு இருக்கிறது அதிலும் அந்த திருமணப்பாடல் .வித்யா மேனன் என்னுடைய செல்போனில் தினமும் இரவு அந்த பாடல் தான் ஒலிக்கிறது ナ.
நேரம் கிடைத்தால் கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள்